திருப்பதி பக்தர்களே உஷார்! இனி டிக்கெட் புக் பண்ணும்போது கவனம் - என்ன மேட்டர்?

Tirumala Tirupati Ticket Booking: திருப்பதியில் அறைகளை முன்பதிவு செய்யும்போது கவனமாக செய்யுங்கள். இதன் மூலம் அதிகப்படியான மோசடிகள் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

1 /7

உலக பணக்கார கடவுள் என்று திருப்பதி எழுமலையான் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி எழுமலையானை காண தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், திருப்பதி கோயிலில் தொடர் விடுமுறை, விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.   

2 /7

இதனால், பக்தர்கள் கால் கடுக்க நின்று தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானமும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு 60,000 பக்தர்கள் வரை தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், விஐபி டிக்கெட் மூலம் தரிசனம் செய்து வருகின்றனர்.   

3 /7

தரிசன டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு தேவஸ்தானம் அறைகளை ஒதுக்கி வருகிறது. அதே நேரத்தில் கூடுதல் அறைகளுக்காக பக்தர்கள் இணையதளத்தில் அறைகளை புக் செய்யும் வசதியும் இருக்கிறது. ஆனால், ஆன்லைனில் சில மோசடிகள் நடந்து வருவதாகவும் தகவல் கசிந்த வண்ணம் உள்ளன.   

4 /7

திருப்பதி தேவஸ்தானத்தின் அறைகள், மாநில அரசுக்கு சொந்தமான  அறைகள் உள்ளிட்டவற்றின் பெயரில்  தனியாக வெப்சைட்டுகளை கூகுள் விளம்பரம் மூலம் மோசடி செய்து வருகின்றனர்.    

5 /7

இதனை பார்க்கும் பக்தர்கள் உண்மை என நம்பி, வெப்சைட்டுகள் மூலம் அறைகளை புக் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் அறைகளுக்கான கட்டணத்தை வசூலிக்கின்றனர்.  இது பணத்தை திருட்டுவதற்கான போலி இணையதளம் என்பது பக்தர்கள் தெரிவதில்ல்லை.   

6 /7

உண்மையான இணையதளம் என்று நம்பி புக் செய்து, அதற்கு டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு,  அறைகளை நேரில் பெற முயற்சிக்கும்போது, இது போலியானது என்பது பக்தர்கள் தெரிய வருகிறது. எனவே, இந்த விஷயத்தில் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறி எச்சரித்துள்ளனர்.  தேவஸ்தானமும் பலமுறை போலி இணையதளங்களை முடக்கி உள்ளது.   

7 /7

எனவே, பக்தர்கள் இனி வரும் நாட்களில்  திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறைகளை புக் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. ttddevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே பக்தர்கள் தரிசன டிக்கெட், அறை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.