Tirupati July Month Ticket Booking: ஜூலை மாதம் திருப்பதி செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு தேதி வெளியாகி உள்ளது. இதன் மூலம், நீங்கள் ஈஸியாக டிக்கெட்டுளை முன்பதிவு செய்ய முடியும்.
Tirupati July Month Ticket Booking: ஜூலை மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ttdevasthanams.ap.gov.in அல்லது திருப்பதி தேவஸ்தானம் செயலி வாயிலாக உங்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் நம்பிக்கையில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு டிக்கெட்டுகளை விநியோகம் செய்து வருகிறது. அதாவது, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், சர்வ தரிசன டோக்கன், மூத்த குடிமக்களுக்கான தரிசனம் போன்றவற்றை மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் முன்பு தரிசன டிக்கெட்டுகளை மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் தேதி வெளியாகி உள்ளது. இதனை தெரிந்து கொண்டு, நீங்கள் தரிசன டிக்கெட்டுகளை ஈஸியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, ஸ்ரீவானி தரிசன டிக்கெட் மற்றும் தங்குமிடத்திற்கான டிக்கெட்டுகள் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 11.00 மணிக்கு டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிடும்.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. ஸ்ரீநிவாஸ திவ்யானுக்ரஹ ஹோமம் டிக்கெட்டுகள் ஏப்ரல் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. தங்குமிடம் முன்பதிவு செய்வதற்கான டிக்கெட்டுகள் ஏப்ரல் 24ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு வெளியாகிறது.
மூத்த குடிமக்கள், மாறறுத்திறனாளிளகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட் ஏப்ரல் 23ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுப்படுகிறது. இலவச அங்கபிரதட்சணம் டிக்கெட் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 10.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவா, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹாரா தீபலங்காரம் போன்ற அர்ஜித சேவா டிக்கெட்டுகள் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10.00 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.
மேலும், சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்ட பாத பத்மாராதனை போன்றவற்றுக்கு லக்கி டிப் ஏப்ரல் 18ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு முடிவடைகிறது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டிக்கெட்டுகள் ஏப்ரல் 20ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு கிடைக்கும்.
எனவே, ஜூலை மாதத்திற்கான தரிசன டிக்கெட் விநியோகம் தேதியை நோட் செய்து கொண்டு, அந்தந்த தேதியில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள். ttdevasthanams.ap.gov.in அல்லது திருப்பதி தேவஸ்தானம் செயலி வாயிலாக உங்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.