ஆத்தாடி.. திருப்பதி லட்டுவில் ரூ.250 கோடி மதிப்புள்ள போலி நெய்.. வெளியான ஷாக் தகவல்

Tirupati Laddu Scam: திருப்பதி லட்டு தயாரிக்க ரூ.250 கோடி மதிப்புள்ளி  போலி நெய் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது, கிட்டகிட்ட 68 லட்சம் கிலோ நெய் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 /7

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு லட்டும் வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டுக்கு ஏராளமான பக்தர்கள் முந்திக் கொண்டு வாங்குவார்கள்.  

2 /7

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்பட்டால், பக்தர்கள் பணம் செலுத்தி தேவைப்படும் அளவுக்கு லட்டுகளை வாங்கும் வகையில், திருப்பதி தேவஸ்தானமும் ஏற்பாடு செய்துள்ளது. இப்படிப்பட்ட லட்டுவில் தான் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகளை எழுந்து ஒட்டுமொத்த திருப்பதி பக்தர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.  

3 /7

ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டுவில் நெய் கலப்படம் செய்யப்பட்டதாக தற்போதை முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கள் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரம் திருப்பதி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெய்வில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. இதனால், இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.  

4 /7

இந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் தற்போது அதிர்ச்சியூட்டும தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, உத்தரகாண்டில் உள்ள பால் நிறுவனம் ஒன்று 2019 முதல் 2024 வரை ஐந்து ஆண்டுகள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கியது தெரியவந்துள்ளது.   

5 /7

அதாவது, உத்தரகாண்டில் உள்ள பால் நிறுவனத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளாக 68 லட்சம் கிலோ நெய் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கப்ப்டடதாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.250 கோடி ஆகும்.  இவை அனைத்தும் கலப்பட நிறைந்த நெய் என்பதும் தெரியவந்துள்ளது.    

6 /7

சமீபத்தில் தான்,  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு  உத்தரகாண்டில் உள்ள பால் நிறுவனத்தில் சோதனையிட்டது. இதில், கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரத்தில் ரசாயனம் விநியோகம் செய்த அஜய் குமார் என்பவர் கைதாகினார்.  இந்த கைதுக்கு பிறகே, இந்த நிறுவனம் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் வழங்கியது தெரியவந்துள்ளது.  

7 /7

கைதான,  அஜய்  குமார் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்க்கு மோனோடிகிளிசரைடுகள் மற்றும் அசிட்டிக் அமில எஸ்டர் உள்ளிட்ட ரசாயனங்களை சப்ளை செய்தது தெரியவந்தது. எனவே,  68 லட்சம் கிலோ நெயில் கலப்பட்ட செய்யபட்டதை கேட்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.