Tiruvanmalai Pournami Girivalam 2025: ஐப்பசி மாத பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1/7சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த பவர்ணமி தினம் வழிபாட்டிற்கும் கிரிவலம் செல்வதற்கும் மிகவும் உன்னதமான நாளாகும். பவர்ணமி அன்று கிரிவலம் செல்வது ஆன்மீக ரீதியாக மிகவும் நல்லது என நம்பப்படுகிறது. இந்த நாளில் தமிழகத்தில் பல மலைக்கோயில்களில் கிரிவலம் வந்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.
2/7அதிலும், திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருவதே பெரும் உயர்வாக பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், அனைத்து நாட்களில் திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
3/7குறிப்பாக, பவர்ணமி கிரிவலுத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர். சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலம் பாதையில் பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
4/7இப்படியான நிலையில், ஐப்பசி பவர்ணமி கிரிவம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பவர்ணமி 2025 நவம்பர் 4ஆம் தேதி செவ்வாய் கிழமை இரவு 9.43 மணிக்கு தொடங்கி, மறுநாள் புதன்கிழமை இரவு 7.27 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என தெரிவித்துள்ளது.
5/7திருவண்ணாமலையில் பவர்ணமி நாளில் கிரிவலம் செல்வதால் நம்முடைய பாவங்கள் அனைத்து நீங்கி புண்ணியம் பெருகும் என நம்பப்படுகிறது. மேலும், இந்ந நாளில் வைக்கும் வேண்டுதல்களை சிவபெருமான் நிறைவேற்றுவார் எனவும் நம்பப்படுகிறது.
6/7மேலும், கிரிவலம் செல்லும்போது சிவாய நம என மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதன் மூலம், நாம் நினைத்த காரியங்கள் அனைத்து கைகூடும் என சொல்லப்படுகிறது. மேலும், திருமண தடை நீங்கவும் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்ள வேண்டும் என ஆன்மீக ரீதியாக சொல்லப்படுகிறது.
7/7மேலும், கிரிவலம் செல்லும்போது ஒருவரைக்கொருவர் இடித்து தள்ளாமல் நிதானமாக நடந்து செல்ல வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகளுக்காக பிரத்யேக வாகனம் இருக்கும். நடக்க முடியாதவர்கள் வாகனத்தில் செல்லலாம் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.