Tamil Nadu Government : புதிய ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசிடமிருந்து வெளியாகியுள்ள புதிய ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு குறித்த அப்டேட் விரிவாக பார்க்கலாம்.
புதிய ரேஷன் கார்டு (new ration card) கேட்டு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
50 ஆயிரம் பேருக்கும் மேல் விரைவில் புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கப்பட உள்ளது. எனவே, புதிதாக விண்ணப்பித்தவர்கள் என்றால், உங்களின் விண்ணப்ப நிலையை செய்து கொள்ளுங்கள்.
புதிய ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை அறிய, நீங்கள் விண்ணப்பிக்கும்போது இறுதியாக ஒரு ஒப்புகைச் சீட்டு கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இருக்கும் விண்ணப்ப எண்ணை எடுத்து, TNPDS வெப்சைட்டில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை அறிய என்ற ஆப்சனில் சென்று பதிவிடவும்.
இப்போது உங்களின் புதிய ரேஷன் கார்டு விண்ணப்ப நிலை திரையில் தோன்றும். நான்கு நிலைகளிலும் வெரிபிகேஷன் முடிந்திருந்தால் கார்டு பிரின்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும். இல்லையென்றால் எந்த நிலையில் உங்கள் விண்ணப்பம் இருக்கிறது என்பது திரையில் தோன்றும்.
உங்களின் விண்ணப்ப நிலையை இப்போது நீங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள். அடுத்ததாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (kalaignar magalir urimai thogai) திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிசம்பர் 12 ஆம் தேதி முதல் மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளார்.
அப்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு அடையாளமாக ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளார். மற்றபடி, தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், யாருக்கேனும் ஆயிரம் ரூபாய் பெறுவதில் குளறுபடிகள் இருந்தால், அதற்கான முறையான ஆவணத்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம். இது குறித்தும் அரசு தெளிவுரை கொடுக்க உள்ளது.
அதேபோல், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய காரணத்தை அரசு தெரிவிக்கும். அதில் திருப்தி இல்லையென்றால் மேல்முறையீடு செய்யலாம். உங்கள் பகுதியில் இருக்கும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
மொத்தம் 29 லட்சம் பெண்கள் புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அவர்களில் தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
பொங்கல் பரிசுத்தொகை (Pongal gift) குறித்த அறிவிப்பும் இம்மாத இறுதிக்குள் வெளியாக இருக்கிறது.
ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ளதால், டோக்கன் விநியோகம் குறித்த அப்டேட்டை அரசு தெரிவிக்க இருக்கிறது. அதேநேரத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் பொங்ககல் பரிசு கிடைக்கும்.
அவர்கள் புதிய ரேஷன் கார்டை வாங்கியவுடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு சென்று கார்டை பதிவு செய்துவிட வேண்டும். அப்போது தான் உங்கள் கார்டு ஆக்டிவேஷன் ஆகும். அதன்பிறகே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும். பொங்கல் பரிசும் கிடைக்கும்.