TN Government Farmers Subsidy: பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறலாம் என உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
1/5தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, பயறுவகைகளை பதப்படுத்தும் நிலையங்களை அமைக்க ரூ.25 லட்சம் வரை மானியம் தரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2/5இதுகுறித்து உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் பயறு வகைகளில் தன்னிறைவுக்கான 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது.
3/5உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட இயக்கம் ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026-27) வழங்கப்பட உள்ளது.
4/5செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், ஈரோடு, திருச்சி,அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. திருவாரூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஊழவர்கள் மானியம் பெற தகுதியுடையவர்கள்.
5/5மேலும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர். திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைத்து பயன்பெற தகுதியுடையவர் ஆவார்கள். எனவே, தகுதியுள்ள பயனாளிகள் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களை 12.06.2026-க்குள் அணுகி பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.