pension : இந்துசமய அறநிலையத்துறை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
pension : இந்து சமய அறநிலையத் துறை ஓய்வூதியம் அதிகரிப்பு திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
இந்துசமய அறநிலையத்துறை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் (pension) அதிகரிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது துறை ரீதியிலான மானியக்கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் அதிகரிப்பு தொடர்பான அரசாணை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை ரூ.4,000/-லிருந்து ரூ.5,000/-ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2,000/-லிருந்து ரூ.2,500/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தொழிலாளர் சேமநலநிதி (EPF) மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முதன்முறையாக துறை நிலையிலான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்திற்கு இணையாக கருணைக் தொகை (EX–gratia) வழங்கப்பட்டும் என்றும் அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு துறைகளை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
அதன்படி, 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 12 நபர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதிற்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.