Ration Card : ரேஷன் கார்டு வகையை மாற்றுவது குறித்த முக்கிய விளக்கத்தை அமைச்சர் சக்கரபாணி கொடுத்துள்ளார்
Ration Card : தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வகையை மாற்றுவது குறித்து வெளியாகியிருக்கும் முக்கிய அறிவிப்பை இங்கே பார்க்கலாம்.
Ration Card : தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வகையை மாற்று விரும்பும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ். குறிப்பாக சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்ற விரும்புவர்களுக்கு அரசு கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்எல்ஏ ஜோசப் எம்எல்ஏ பேசும்போது, சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அம்பத்தூர் தொகுதியில் உள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு இதை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தகுதியுள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு கள ஆய்வு மூலம் உறுதி செய்து சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.,
மேலும், தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதால் சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்களுக்கு இப்போது அரசு கொடுத்த ரூ.3000 கிடைத்திருக்காது.
அதற்காகவே பலரும் இந்த கோரிக்கையை வைக்கின்றனர். இதனை அதிகாரிகள் மூலம் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி அட்டையாக மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அமைச்சர் சக்கரபாணி பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்களைக் காட்டிலும் அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கே அரசின் நலத்திட்டங்களில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்கு அரிசி ரேஷன் கார்டுகளே அவசியம்.
எனவே, பொதுமக்கள் பலரும் அரிசி கார்டுக்கு மாற விண்ணப்பிக்கின்றனர். இதற்கு மாதந்தோறும் ஒவ்வொரு வட்டங்களிலும் நடக்கும் அரசின் பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்களில் பொதுமக்கள் மனு கொடுக்கலாம்.
ஜனவரி மாதம் 24 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கார்டு குறைத்தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது
தாலுகா வாரியாக நடக்கும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டு பெயர் மாற்றம், நீக்கம், ரேஷன் கார்டு வகை மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு கொடுக்கலாம்.
மேலும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் முத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதற்கும் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
இந்த மாதமே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜனவரி 24 ஆம் தேதி ஒவ்வொரு தாலுகாவிலும் நடக்கும் பொதுவிநியோக குறைத்தீர்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு உங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மனு கொடுத்து பயனடையவும்.