tn unemployment assistance 2025 : சென்னை, திருச்சி மாவட்டத்தினர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
tn unemployment assistance 2025 : சென்னை, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
1/13வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
2/13யார் விண்ணப்பிக்கலாம்? | இந்த உதவித் தொகையைப் பெற, விண்ணப்பதாரர்கள் சில முக்கியத் தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்:
3/13பொதுப் பிரிவினர்: எஸ்.எஸ்.எல்.சி தோல்வி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 31.12.2025 அன்றைய தேதியில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து காத்திருப்பவராக இருக்க வேண்டும். அத்துடன், பதிவைப் புதுப்பித்து வருபவராக இருத்தல் அவசியம்.
4/13மாற்றுத்திறனாளிகள்: எழுதப் படிக்கத் தெரிந்தவர் முதல் பட்டப்படிப்பு வரை படித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.09.2025 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5/13வயது வரம்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு ஏதுமில்லை).
6/13வருமான உச்ச வரம்பு: விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை).
7/13பிற தகுதிகள்: விண்ணப்பதாரர் எந்தவொரு தனியார் நிறுவனத்திலோ அல்லது அரசுத் துறையிலோ ஊதியம் பெறும் பணியில் இருக்கக்கூடாது. சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாதவராகவோ அல்லது எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் படிப்பவராகவோ இருக்கக்கூடாது. அரசு முதியோர் உதவித்தொகை (OAP) பெறுபவராக இருக்கக்கூடாது.
8/13பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் கல்விப் பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு இந்த உதவித்தொகை பெறத் தகுதியில்லை.
9/13பொதுப் பிரிவினர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மைக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.400, மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 வழங்கப்படும்.
10/13மாற்றுத்திறனாளிகள் (சிறப்பு நேர்வு): எழுதப் படிக்கத் தெரிந்தவர் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.600, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.750, மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000 என மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
11/13சென்னை மாவட்டத்தினர்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், சென்னை-32, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய விண்ணப்ப படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவ/மாணவிகள் கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
12/13திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினர்: தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பயன்பெறலாம் எனத் திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
13/13ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள், விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு நிறைவு பெற்றிருந்தால், அவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (MR. No.), வங்கி புத்தக நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் சுய உறுதி மொழி ஆவணத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.