Ration Card : பொதுமக்கள் பொருளில்லா ரேஷன் கார்டுக்கு மாறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Ration Card Latest News : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பொருளில்லா அட்டைக்கு மாறவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு (Ration Card) 5 வகைகளாக உள்ளன. மக்களின் பொருளாதார தகுதிக்கு ஏற்ப இந்த குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன.
முன்னுரிமை குடும்பம் (PHH): இந்த ரேஷன் கார்டு, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை, மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைக்கும்.
முன்னுரிமை இல்லாத குடும்பம் (NPHH): இந்த ரேஷன் கார்டு, அதிக அளவிலான குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை, மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைக்கும், ஆனால் PHH அட்டையை வைத்திருப்பவர்களுடன் ஒப்பிடும்போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
அந்தியோதயா அன்ன யோஜனா (AAY): இந்த ரேஷன் கார்டு, மிகவும் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் அதிக அளவு அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும்.
சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S): இந்த ரேஷன் கார்டு, NPHH அட்டையை வைத்திருப்பவர்களால் சர்க்கரை வாங்க விரும்பினால், அவர்கள் இந்த அட்டையைத் தேர்வு செய்யலாம்.
பொருளில்லா அட்டை (NPHH-NC): இந்த ரேஷன் கார்டை வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்க முடியாது.
இந்த சூழலில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ரேஷன் கார்டு மாற்றம் தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைதளத்தின் மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் விட்டுக்கொடுக்கலாம் என கூறியுள்ளார்.
அந்த குடும்ப அட்டைதாரர்கள் தங்களது உரிமத்தினை விட்டுக் கொடுப்பது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.