நவக்கிரக கோவில்களில் சிறப்பு தரிசனம்... அதுவும் ஒரே நாளில் - தமிழக அரசின் ஏற்பாடு!

Written BySudharsan G
Published: Jul 31, 2025, 08:34 PM IST|Updated: Jul 31, 2025, 08:34 PM IST

Navagraha Kumbakonam Temples One Day Trip: ஒரே நாளில் 9 நவக்கிரக பரிகார திருத்தலங்களுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்ய குறைந்த கட்டணத்தில் பக்தர்களுக்கான பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது.

Kumbakonam Navagraha Temples Special Darshan:கும்பகோணத்தை சுற்றி உள்ள 9 நவக்கிரக கோவில்களில் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பேருந்து சேவை மட்டுமின்றி பல்வேறு சேவைகளும் கிடைக்கும்.

தமிழக அரசு 1/8

தமிழக அரசு

தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) பல்வேறு ஆன்மீக ரீதியிலான சுற்றுலாக்களை தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் 9 நவக்கிரக திருத்தலங்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக அரசு 2/8

தமிழக அரசு

இதன்மூலம், கும்பகோணத்தை சுற்றி உள்ள 9 நவக்கிரக பரிகார திருத்தலங்களுக்கு (Kumbakonam Navagraha Temples) சென்று சிறப்பு தரிசனம் (Special Darshan) செய்ய குறைந்த கட்டணத்தில் பக்தர்களுக்கான பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழக அரசு 3/8

தமிழக அரசு

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் காலை 5 மணிக்கு சுற்றுலா பேருந்து புறப்படும் நிலையில், அன்று இரவு 8 மணிக்கு அதே கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நிறைவடையும். இந்த சுற்றுலா ஒரே ஒரு நாள் ஆகும். 

 

தமிழக அரசு 4/8

தமிழக அரசு

நீங்கள் ஏசி மற்றும் ஏசி இல்லாத பேருந்துகளில் பயணிக்கலாம். ஏசி இல்லாத பேருந்துக்கு 750 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஏசி பேருந்துக்கு 1350 ரூபாய வசூலிக்கப்படும். வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாள்களில் மட்டுமே ஏசி பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்படுகிறது.

 

தமிழக அரசு 5/8

தமிழக அரசு

சிறப்பு தரிசன அடையாள அட்டை, பிற மொழி பக்தர்களுக்காக வாட்ஸ்அப்பில் வீடியோ வழிகாட்டி, வழிகாட்டி சேவை, கோவில்களின் வரலாறு அறிவிப்பு ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது. 

 

தமிழக அரசு 6/8

தமிழக அரசு

இந்த ஒரு நாள் சுற்றுலாவில், சந்திரன் பரிகார ஸ்தலம் - திங்களூர்; குருபகவான் பரிகார ஸ்தலம் - ஆலங்குடி; ராகு ஸ்தலம் - திருநாகேஸ்வரம்; சூரிய பகவான் - சூரியனார் கோவில்; சுக்கிர பகவான் - கஞ்சனூர்; செவ்வாய் பரிகாரம் ஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோவில்; புதன் ஸ்தலம் - திருவெண்காடு; கேது ஸ்தலம் - கீழப்பெரும்பள்ளம்; சனி பகவான் - திருநள்ளாறு ஆகிய கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். 

 

தமிழக அரசு 7/8

தமிழக அரசு

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மட்டும் இந்த சுற்றுலா திட்டத்தில் சுமார் 30 ஆயிரத்து 606 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரே நாளில் நீங்கள் 9 நவக்கிரக கோவில்களுக்கும் சென்று சிறப்பு தரிசனம் மேற்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

 

தமிழக அரசு 8/8

தமிழக அரசு

இந்த சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்ய இந்த புகைப்படத்தில் காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். www.tnstc.in என்ற இணையத்தளம் வாயிலாகவும் பதிவு செய்யலாம். மேலும் தொடர்புக்கு: 9443263988, 9489795509.