இன்றைய ராசிபலன் (டிசம்பர் 13, 2025): பணவரவு நன்றாக இருக்கும் நாள்!

December 13 Today Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 13 சனிக்கிழமை, 12 ராசிகளுக்கான பலன்களை இங்கே தெரிந்துக்கொள்வோம். 

 

1 /13

மேஷம்: மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் 

2 /13

ரிஷபம்: ஆன்மீக பணிகளில் தெளிவுகள் ஏற்படும். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேலோங்கும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். பொறுமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

3 /13

மிதுனம்: பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். கோப உணர்ச்சிகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அசதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு  அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

4 /13

கடகம்: எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சகோதர வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

5 /13

சிம்மம்: குடும்பத்தை பற்றிய எண்ணம் மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.  வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். பயணம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

6 /13

கன்னி: நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உறவுகள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சிறு தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். திடிர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு  அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

7 /13

துலாம்: தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் எண்ணிங்களை நிறைவேற்றுவீர்கள். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும். சோர்வு விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு  அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

8 /13

விருச்சிகம்: குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள்  பக்கபலமாக செயல்படுவார்கள். சுபமுயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். யோகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

9 /13

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். சிந்தனை திறனில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மறதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு  அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

10 /13

மகரம்: நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். சினம் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

11 /13

கும்பம்: வேகத்தை விட விவேகத்தை கையாளுவது நல்லது. நினைத்து ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். வரவைவிடச் செலவுகள் மேம்படும்.  உழைப்புக்குண்டான பலன் கால தாமதமாகும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 

12 /13

மீனம்: குடும்பத்தில் சாதகமாக சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் ஆதரவுடன் சில செயல்களை முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். மேலதிகாரி ஆதரவாக செயல்படுவார்கள். இரக்கம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.