இன்றைய ராசிபலன்: ஐப்பசி 29 - எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள்?

Written BySudharsan G
Published: Nov 15, 2025, 06:06 AM IST|Updated: Nov 15, 2025, 06:06 AM IST

November 15 Today Rasipalan: ஐப்பசி மாதம் 29ஆம் நாளான இன்று (நவம்பர் 15) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Today Horoscope In Tamil: இன்று ஐப்பசி 29ஆம் நாள் சனிக்கிழமை (நவம்பர் 15) விசுவாசுவ வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 11:41 முதல் மதியம் 12:27 வரை, அமிர்த காலம் - மதியம் 3:40 முதல் மாலை 5:25 வரை, பிரம்மா முகூர்த்தம் - காலை 04:39 முதல் காலை 05:27 வரை. அசுபமான காலம்: இராகு - காலை 9:09 முதல் காலை 10:37 வரை; எமகண்டம் - மதியம் 1:31 முதல் மதியம் 2:58 வரை; குளிகை - காலை 6:15 முதல் காலை 7:42; துரமுஹுர்த்தம் - காலை 7:48 முதல் காலை 8:35 வரை, தியாஜ்யம் - அதிகாலை 5:12 முதல் காலை 6:57 வரை. சூரியோதயம் - காலை 6:15 சூரியஸ்தமம் - மாலை 5:53. சூலம் - கிழக்கு, பரிகாரம் - தயிர். இன்று மேல் நோக்கு நாள் மற்றும் தேய்பிறை ஆகும். 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை இங்கு பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்1/13

இன்றைய ராசிபலன்

பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

இன்றைய ராசிபலன்2/13

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படவும். நண்பர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : அமைதியான நாள். பரணி : இன்னல்கள் குறையும்.  கிருத்திகை : விட்டுக் கொடுத்து செயல்படவும்.

இன்றைய ராசிபலன்3/13

இன்றைய ராசிபலன்

ரிஷபம்: பணியாட்களில் சில மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். மனை சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.  ரோகிணி : அனுபவம் உண்டாகும்.  மிருகசீரிஷம் : அறிமுகம் உண்டாகும். 

இன்றைய ராசிபலன்4/13

இன்றைய ராசிபலன்

மிதுனம்: நினைத்து சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். உடன் இருப்பவர்களால் ஆதரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு  அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் மிருகசீரிஷம் : ஆதரவுகள் கிடைக்கும்.  திருவாதிரை : முன்னேற்றமான நாள். புனர்பூசம் : தெளிவுகள் ஏற்படும்.

இன்றைய ராசிபலன்5/13

இன்றைய ராசிபலன்

கடகம்: தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் மத்தியமான லாபங்கள் கிடைக்கும். கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம்  பூசம் : அனுகூலம் ஏற்படும். ஆயில்யம் : கவனம் வேண்டும்.

இன்றைய ராசிபலன்6/13

இன்றைய ராசிபலன்

சிம்மம்: தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். தடைப்பட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் உண்டாகும். வீடு மனை விற்பதில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். உழைப்புக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு  அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மகம் : புரிதல் ஏற்படும்.  பூரம் : லாபகரமான நாள். உத்திரம் : அனுபவங்கள் கிடைக்கும்.

இன்றைய ராசிபலன்7/13

இன்றைய ராசிபலன்

கன்னி: குடும்பத்தின் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அளவுடன் செயல்படுவது நல்லது. சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.  அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும். சித்திரை : கவனம் வேண்டும். 

இன்றைய ராசிபலன்8/13

இன்றைய ராசிபலன்

துலாம்: கணவன் மனைவிக்கு அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தடைகளால் தாமதமும் அலைச்சலும் ஏற்படும். முயற்சி ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம் சித்திரை : அனுசரித்து செல்லவும்.  சுவாதி : முதலீடுகளில் கவனம். விசாகம் : அலைச்சல் ஏற்படும்.

இன்றைய ராசிபலன்9/13

இன்றைய ராசிபலன்

விருச்சிகம்: மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நினைத்த காரியம் கைக்கூடி வரும். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மன திருப்தியை ஏற்படுத்தும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.  அனுஷம் : சாதகமான நாள். கேட்டை : லாபகரமான நாள்.

இன்றைய ராசிபலன்10/13

இன்றைய ராசிபலன்

தனுசு: கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். விலகி இருந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். சில மாற்றங்கள் மூலம் மேன்மைகளை உருவாக்குவீர்கள். வியாபாரம் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் மூலம் : ஒத்துழைப்புகள் ஏற்படும். பூராடம் : அலைச்சல் உண்டாகும்.  உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.

இன்றைய ராசிபலன்11/13

இன்றைய ராசிபலன்

மகரம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கான மதிப்புகள் கிடைக்கும். ஆன்மீக சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம் உத்திராடம் : புரிதல் உண்டாகும். திருவோணம் : உதவிகள் கிடைக்கும். அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

இன்றைய ராசிபலன்12/13

இன்றைய ராசிபலன்

கும்பம்: புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். வீண் செலவுகளால் மனம் சஞ்சலமாகும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த வரவுகள் தாமதமாக கிடைக்கும். குழப்பம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு  அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்  அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.  சதயம் : அலைச்சல்கள் ஏற்படும்.  பூரட்டாதி : தாமதம் ஏற்படும்.

இன்றைய ராசிபலன்13/13

இன்றைய ராசிபலன்

மீனம்: சகோதரர்களின் அரவணைப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் கணிசமாக உயரும். அலுவலகத்தில் மேன்மையான சூழல்கள் அமையும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். கோபம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.  உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள். ரேவதி : நெருக்கம் அதிகரிக்கும்.