இன்றைய ராசிபலன்: கார்த்திகை 7 - எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள்...?

Written BySudharsan G
Published: Nov 23, 2025, 06:12 AM IST|Updated: Nov 23, 2025, 06:12 AM IST

November 23 Today Rasipalan: கார்த்திகை மாதம் 7ஆம் நாளான இன்று (நவம்பர் 23), 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Today Horoscope In Tamil: இன்று கார்த்திகை 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) விசுவாசுவ வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 11:42 முதல் மதியம் 12:29 வரை, அமிர்த காலம் - மதியம் 12:24 முதல் மதியம் 2:11 வரை, பிரம்மா முகூர்த்தம் - காலை 04:42 முதல் காலை 05:30 வரை. அசுபமான காலம்: இராகு - மாலை 4:26 முதல் மாலை 5:53 வரை; எமகண்டம் - மதியம் 12:06 முதல் மதியம் 1:33 வரை; குளிகை - மதியம் 3:00 முதல் மாலை 4:26; துரமுஹுர்த்தம் - மாலை 4:21 முதல் மாலை 5:07 வரை. தியாஜ்யம் - மாலை 5:39 முதல் காலை 7:26 வரை, காலை 6:01 முதல் காலை 7:47 வரை. சூரியோதயம் - காலை 6:18 சூரியஸ்தமம் - மாலை 5:53. சூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம். இன்று கீழ் நோக்கு நாள் மற்றும் வளர்பிறை ஆகும். 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை இங்கு பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்1/13

இன்றைய ராசிபலன்

பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

இன்றைய ராசிபலன்2/13

இன்றைய ராசிபலன்

மேஷம்: மனதளவில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட தூர ஒரு பயண வாய்ப்புகள் கைகூடும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு  அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்  அஸ்வினி : குழப்பங்கள் விலகும். பரணி : வரவுகள் கிடைக்கும்.  கிருத்திகை : வாய்ப்புகள் கைகூடும். 

இன்றைய ராசிபலன்3/13

இன்றைய ராசிபலன்

ரிஷபம்: உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உருவாகும். வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு  அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்   கிருத்திகை : புரிதல் அதிகரிக்கும்.  ரோகிணி : அனுபவம் உண்டாகும். மிருகசீரிஷம் : முடிவுகளில் கவனம்.

இன்றைய ராசிபலன்4/13

இன்றைய ராசிபலன்

மிதுனம்: குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும். பயணங்கள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். திருவாதிரை : வேறுபாடுகள் விலகும். புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

இன்றைய ராசிபலன்5/13

இன்றைய ராசிபலன்

கடகம்: குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் புனர்பூசம் : பொறுமை வேண்டும். பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும். ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

இன்றைய ராசிபலன்6/13

இன்றைய ராசிபலன்

சிம்மம்: முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதுவிதமான கனவுகள் உருவாகும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் மகம் : தாமதங்கள் விலகும்.  பூரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்திரம் : முயற்சிகள் கைகூடும். 

இன்றைய ராசிபலன்7/13

இன்றைய ராசிபலன்

கன்னி: உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கால்நடை விஷயங்களில் மேன்மை ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்  உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  அஸ்தம் : லாபகரமான நாள். சித்திரை : மேன்மையான நாள்.

இன்றைய ராசிபலன்8/13

இன்றைய ராசிபலன்

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் கருத்துக்கான மதிப்புகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்  சித்திரை : தீர்வு கிடைக்கும்.  சுவாதி : எதிர்ப்புகள் விலகும். விசாகம் : மதிப்புகள் மேம்படும்.

இன்றைய ராசிபலன்9/13

இன்றைய ராசிபலன்

விருச்சிகம்: கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். சூழ்நிலை அறிந்து திறமைகளை வெளிப்படுத்தவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் விசாகம் : புரிதல் உண்டாகும். அனுஷம் : திறமைகள் வெளிப்படும். கேட்டை : சாதகமான நாள்.

இன்றைய ராசிபலன்10/13

இன்றைய ராசிபலன்

தனுசு: சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்  மூலம் : ஆதாயகரமான நாள். பூராடம் : அந்நியோன்யம் அதிகரிக்கும்.  உத்திராடம் : சாதகமான நாள்.

இன்றைய ராசிபலன்11/13

இன்றைய ராசிபலன்

மகரம்: எதிர்காலம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மருத்துவ செலவுகள் சிலருக்கு ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். பணி சார்ந்த அலைச்சல்கள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்  உத்திராடம் : கவலைகள் நீங்கும்.   திருவோணம் : சஞ்சலமான நாள். அவிட்டம் : அலைச்சல்கள் மேம்படும்.

இன்றைய ராசிபலன்12/13

இன்றைய ராசிபலன்

கும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். சொத்து சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு  அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்  அவிட்டம் : ஒத்துழைப்புகள் மேம்படும். சதயம் : முயற்சிகள் ஈடேறும்.  பூரட்டாதி : நம்பிக்கை பிறக்கும்.

இன்றைய ராசிபலன்13/13

இன்றைய ராசிபலன்

மீனம்: சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு விஷயங்களில் புரிதல்கள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் பூரட்டாதி : புரிதல்கள் ஏற்படும் உத்திரட்டாதி : உதவிகள் சாதகமாகும். ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.