November 7 Today Rasipalan: ஐப்பசி மாதம் 21ஆம் நாளான இன்று (நவம்பர் 7) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Today Horoscope In Tamil: இன்று ஐப்பசி 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) விசுவாசுவ வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 11:40 முதல் மதியம் 12:26 வரை, அமிர்த காலம் - இரவு 10:20 முதல் இரவு 11:45 வரை, பிரம்மா முகூர்த்தம் - காலை 04:37 முதல் காலை 05:25 வரை. அசுபமான காலம்: இராகு - காலை 10:35 முதல் மதியம் 12:03 வரை; எமகண்டம் - மதியம் 2:58 முதல் மாலை 4:26 வரை; குளிகை - காலை 7:40 முதல் காலை 9:08; துரமுஹுர்த்தம் - காலை 8:33 முதல் காலை 9:20 வரை, மதியம் 12:26 முதல் மதியம் 1:13; தியாஜ்யம் - மாலை 5:30 முதல் மாலை 6:54 வரை, காலை 5:34 முதல் காலை 7:00 வரை. சூரியோதயம் - காலை 6:13 சூரியஸ்தமம் - மாலை 5:53. சூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம். இன்று மேல் நோக்கு நாள் மற்றும் தேய்பிறை ஆகும். 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை இங்கு பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
மேஷம்: குடும்ப நபர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்காலம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : அனுசரித்து செல்லவும். பரணி : ஆர்வம் உண்டாகும். கிருத்திகை : தேடல்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்: குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். வாக்கு சாதுரியம் ஏற்படும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவார்கள். தியானம் மூலம் மன அமைதி உண்டாகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். உழைப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் கிருத்திகை : அலட்சியமின்றி செயல்படவும். ரோகிணி : மாற்றம் ஏற்படும். மிருகசீரிஷம் : பயணங்கள் தள்ளிப்போகும்.
மிதுனம்: குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். விவசாய பணிகளில் அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும்.புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களால் வருத்தங்கள் நேரிடும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். திருவாதிரை : மாற்றமான நாள். புனர்பூசம் : புதுமையான நாள்.
கடகம்: பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாகும். நட்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அறிமுகம் கிடைக்கும். புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும். பூசம் : திறமைகள் வெளிப்படும். ஆயில்யம் : உதவிகள் சாதகமாகும்.
சிம்மம்: உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் மகம் : ஆதரவான நாள். பூரம் : ஆசைகள் நிறைவேறும். உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி: எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயலபடவும். நேர்மை வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும். அஸ்தம் : சலசலப்புகள் விலகும். சித்திரை : பொறுமையுடன் செயலபடவும்.
துலாம்: எதிலும் நேர்மையுடன் செயல்படவும். மனை விற்பனையில் மந்தமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் கவனம் வேண்டும். நட்பு வட்டங்களில் புதிய அனுபவங்கள் உண்டாகும். மற்றவர்களின் குறைகளை பெரிது படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உயர் அதிகாரிகளால் பொறுப்புக்கள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் சித்திரை : மந்தமான நாள். சுவாதி : அனுபவங்கள் உண்டாகும். விசாகம் : பொறுப்புக்கள் மேம்படும்.
விருச்சிகம்: விரும்பிய காரித்தை நினைத்த படியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : கலகலப்பான நாள். அனுஷம் : கவனம் வேண்டும். கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.
தனுசு: உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். முயற்சி ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். பங்குதாரர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். வீடு மனை விற்பனையில் லாபம் உண்டாகும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மூலம் : ஆர்வம் உண்டாகும். பூராடம் : அனுசரித்து செல்லவும். உத்திராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
மகரம்: புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களால் செலவுகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திராடம் : நெருக்கடிகள் குறையும். திருவோணம் : ஆர்வம் உண்டாகும். அவிட்டம் : செலவுகள் உண்டாகும்.
கும்பம்: குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் செழிப்பான வாய்ப்புகள் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அவிட்டம் : ஆதரவு கிடைக்கும். சதயம் : கவனம் வேண்டும். பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்
மீனம்: சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும். உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும். ரேவதி : ஆதரவுகள் மேம்படும்.