July 13 Today Rasipalan: ஆனி மாதம் 29ஆம் நாளான இன்று (ஜூலை 13) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Today Horoscope In Tamil: இன்று(ஜூலை 13) ஆனி 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுபமான காலம் அபிஜித் காலம் - நண்பகல் 12:00 முதல் 12:50 வரை; அமிர்த காலம் - நள்ளிரவு 08:25 முதல் 10:00 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 4.36 முதல் 05:24 வரை. அசுபமான காலம் - இராகு - மாலை 5:05 முதல் 6:38 வரை,
எமகண்டம் - நண்பகல் 12:25 முதல் 1:58 வரை, குளிகை - நண்பகல் 3:32 முதல் மாலை 5:05, துரமுஹுர்த்தம் - மாலை 04:58 முதல் 05:48 வரை, தியாஜ்யம் - காலை 10:52 முதல் 12:28 வரை, சூரியன் மற்றும் சந்திரன் நேரம் - சூரியோதயம் காலை 6:12,
சூரியஸ்தமம் மாலை 6:38. வாரசூலை - சூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம். இன்று மேல் நோக்கு நாள் மற்றும் தேய்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
1/13பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
2/13சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வித்தியாசமான அணுகுமுறைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்வியில் மேன்மை ஏற்படும். அனுபவம் கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம் அஸ்வினி : ஒத்துழைப்புகள் கிடைக்கும். பரணி : லாபம் மேம்படும். கிருத்திகை : மேன்மையான நாள்.
3/13சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கை கொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தநிலை குறையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிக்கல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். கிருத்திகை : பொறுப்பறிந்து செயல்படவும். ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
4/13விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபார ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நன்மையை உருவாக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மிருகசீரிஷம் : மதிப்புகள் உருவாகும். திருவாதிரை : ஒப்பந்தங்களில் கவனம் புனர்பூசம் : புரிதல் ஏற்படும்.
5/13மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருக்கவும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். நினைத்த சில செயல்களில் தாமதம் ஏற்படும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். கல்வி தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : உபாதைகள் மறையும். பூசம் : அனுசரித்து செல்லவும். ஆயில்யம் : பயணங்களில் கவனம்
6/13செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். தோற்ற பொழிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியில் ஆதரவுகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
மகம் : பாராட்டுக்கள் கிடைக்கும். பூரம் : புரிதல் உண்டாகும். உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும்.
7/13வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். சமூக வாழ்க்கையில் மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் மேம்படும். சிக்கல்கள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : லாபம் மேம்படும். அஸ்தம் : மரியாதை அதிகரிக்கும். சித்திரை : ஆதரவுகள் மேம்படும்.
8/13கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் மதிப்புகள் உயரும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். ரகசிய பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும். சுவாதி : மதிப்புகள் உயரும். விசாகம் : இலக்குகள் பிறக்கும்.
9/13நீண்ட நாள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். மாமன் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது சிக்கல்களை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான சிந்தனைகள் பிறக்கும். பயண செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
விசாகம் : ஒத்துழைப்பான நாள். அனுஷம் : சிந்தனைகள் பிறக்கும். கேட்டை : விவேகம் வேண்டும்.
10/13பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் சில அலைச்சல்களால் புதிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : அனுகூலம் ஏற்படும். பூராடம் : அனுபவம் கிடைக்கும். உத்திராடம் : தைரியம் பிறக்கும்.
11/13குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சிக்கல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு நிறம்
உத்திராடம் : அனுசரித்து செல்லவும். திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும். அவிட்டம் : திருப்தியான நாள்.
12/13சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பயணங்களை தவிர்க்க முடியும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் ஆர்வம் இன்மை உண்டாகும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். மனதளவில் ஒரு விதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர் இடத்தில் கனிவு வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : பயணங்களில் கவனம். சதயம் : ஆர்வமின்மையான நாள். பூரட்டாதி : கனிவு வேண்டும்.
13/13விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்களில் நிதானத்தை கையாள்வது நல்லது. ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும். உத்திரட்டாதி : சோர்வான நாள். ரேவதி : அனுசரித்து செல்லவும்.