சித்திரை 14 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஏப்ரல் 27ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /12

முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். உதவி செய்வோரின் சுயரூபங்களை அறிவீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் உண்டாகும். நட்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் அஸ்வினி : அனுசரித்து செல்லவும். பரணி : விவேகத்துடன் செயல்படுவீர்கள். கிருத்திகை : மாற்றமான நாள்.

2 /12

பாரம்பரியமான விஷயங்களில் ஆர்வமின்மை உண்டாகும். முதுநிலை கல்வியில் விவேகம் வேண்டும். மறை சக்திகளை பற்றிய புரிதல் ஏற்படும். இசை துறைகளில் மாற்றமான சூழல் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். பிரீதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் கிருத்திகை : ஆர்வமின்மையான நாள். ரோகிணி : நிதானம் வேண்டும். மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

3 /12

சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம் மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும். திருவாதிரை : அபிவிருத்தியான நாள். புனர்பூசம் : பாராட்டுக்கள் கிடைக்கும்.

4 /12

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம் புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும். பூசம் : மகிழ்ச்சியான நாள். ஆயில்யம் : தனித்தன்மை வெளிப்படும்.

5 /12

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றும். நீண்ட தூரப் பயணம் குறித்த வாய்ப்புகள் சாதகமாகும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த சில மாற்றங்கள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் மகம் : வெற்றி கிடைக்கும். பூரம் : வாய்ப்புகள் சாதகமாகும். உத்திரம் : மாற்றமான நாள்.

6 /12

மனதளவில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். பழைய உறவுகளைப் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய முடிவுகளை தவிர்க்கவும். நேர்மறை எண்ணங்களோடு எதிலும் செயலாற்றவும். உத்தியோகத்தில் சில எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். அமைதியின்மையான நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் நிறம் உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும். அஸ்தம் : சிந்தித்து செயல்படவும். சித்திரை : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.

7 /12

சுபகாரியம் சார்ந்த விரயங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். செல்வசேர்கைக்கான முயற்சிகள் கைகூடும். மனதளவில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். திறமைக்கான மதிப்பு கிடைக்கும். தன்னம்பிகை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம் சித்திரை : முயற்சிகள் கைகூடும். சுவாதி : ஆதரவான நாள். விசாகம் : மதிப்பு கிடைக்கும்.

8 /12

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் மேன்மை உண்டாகும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : தேடல்கள் அதிகரிக்கும். அனுஷம் : பக்குவம் பிறக்கும். கேட்டை : மேன்மை உண்டாகும்.

9 /12

புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உயர்கல்வி குறித்ததான எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். கோபம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7   அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : இலக்குகள் பிறக்கும். பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும். உத்திராடம் : குழப்பமான நாள்.

10 /12

உயர்கல்வியில் தெளிவு உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சமூகம் சார்ந்த பணிகளில் மதிப்பு உயரும். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். அரசு சார்ந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். ஆதரவு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : தெளிவு உண்டாகும். திருவோணம் : நெருக்கடிகள் குறையும். அவிட்டம் : புரிதல் உண்டாகும்.

11 /12

குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்பு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். அதிரடியான சில செயல்களின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வீம்பு மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும். சதயம் : மதிப்பு உயரும்.   பூரட்டாதி : தன்னம்பிக்கை பிறக்கும். 

12 /12

உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். திட்டமிட்ட காரியத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் சந்திப்பு உண்டாகும். வருமானத்திற்கான வாய்ப்புகள் மேம்படும். சுபகாரியம் சார்ந்த பேச்சு வார்த்தைகள் கைகூடும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் பூரட்டாதி : திருப்தியான நாள். உத்திரட்டாதி :  சந்திப்பு உண்டாகும். ரேவதி : சாதகமான நாள்.