Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 04ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
1/12சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். இணையம் தொடர்பான துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் திருப்தியின்மையான சூழல்கள் உருவாகும். தந்தை வழி நட்புகளால் ஆதாயம் ஏற்படும். புதிய முடிவுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். ஆடம்பரமான பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
அஸ்வினி : மாற்றமான நாள். பரணி : ஆதாயகரமான நாள். கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.
2/12பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
கிருத்திகை : அறிமுகங்கள் கிடைக்கும். ரோகிணி : முன்னேற்றமான நாள். மிருகசீரிஷம் : பொறுப்புகள் கிடைக்கும்.
3/12தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
மிருகசீரிஷம் : வேறுபாடுகள் விலகும். திருவாதிரை : ஆதாயகரமான நாள். புனர்பூசம் : சாதகமான நாள்.
4/12கல்விப் பணிகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆர்வமின்மை குறையும். பூசம் : குழப்பங்கள் நீங்கும். ஆயில்யம் : லாபகரமான நாள்.
5/12ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். விவசாய பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். பக்தி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : ஆதாயகரமான நாள். பூரம் : தடைகள் விலகும். உத்திரம் : பொறுப்புகள் கிடைக்கும்.
6/12எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்த மந்த தன்மை குறையும். சிந்தனை போக்கில் இருந்த குழப்பங்கள் விலகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சி வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : வெற்றிகரமான நாள். அஸ்தம் : குழப்பங்கள் விலகும். சித்திரை : ஆதரவான நாள்.
7/12கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சித்திரை : தெளிவுகள் பிறக்கும். சுவாதி : சங்கடங்கள் மறையும். விசாகம் : அறிமுகங்கள் கிடைக்கும்.
8/12கொடுக்கல் வாங்கலில் பொறுமை காக்கவும். கமிஷன் விஷயங்களில் சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும். பங்கு சந்தைகளில் திட்டமிட்டு செயல்படவும். மேடைப்பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
விசாகம் : பொறுமை காக்கவும். அனுஷம் : திட்டமிட்டு செயல்படவும். கேட்டை : நெருக்கடியான நாள்.
9/12குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல்கள் ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : குழப்பங்கள் நீங்கும். பூராடம் : புதுமையான நாள். உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
10/12பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். எதிர்பாராத திடீர் திருப்பம் மூலம் புதுமை பிறக்கும். கால்நடை வளர்ப்பு துறைகளில் லாபம் கிடைக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : தெளிவுகள் பிறக்கும். திருவோணம் : லாபகரமான நாள். அவிட்டம் : ஆர்வம் மேம்படும்.
11/12அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். தெய்வீக பணிகளில் நாட்டம் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : மாற்றம் ஏற்படும். சதயம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும். பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
12/12ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தான தர்ம செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். இழுபறியான வேலைகள் நிறைவு பெறும். தாயார் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும். உத்திரட்டாதி : இழுப்பறி மறையும். ரேவதி : ஆதரவான நாள்.