இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை - சந்திராஷ்டமம், கவனம் தேவை!

Published: Oct 24, 2025, 06:20 AM IST|Updated: Oct 24, 2025, 06:20 AM IST

இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை அக்டோபர் 24 மேஷம் முதல் மீனம் வரை

 

இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை அக்டோபர் 24, எந்த ராசிக்கு சந்திராஷ்டமம், யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

 

1/12

மேஷம் (Aries) - இன்று சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் நிதானம் தேவை. முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. அலைச்சல்கள் கூடும். பேச்சில் கவனம் தேவை.

 

2/12

ரிஷபம் (Taurus) - உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலை சீராக இருக்கும். புதிய முயற்சிகளைத் துணிவுடன் மேற்கொள்ளலாம்.

 

3/12

மிதுனம் (Gemini) - எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். தொழில்/வேலை இடத்தில் உங்கள் செயல் திறனுக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.

 

4/12

கடகம் (Cancer) மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். நிதி நிலைமை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
5/12

சிம்மம் (Leo) - கவனமாகச் செயல்பட வேண்டிய நாள். வீண் அலைச்சல் மற்றும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுமையுடன் இருப்பது நல்லது.

 

6/12

கன்னி (Virgo) -  எடுத்த காரியங்களில் வெற்றி காணும் நாள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும்.

 

7/12

துலாம் (Libra) - குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்தி அளிக்கும். சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் மதிப்பு கூடும்.

 

8/12

விருச்சிகம் (Scorpio) - உங்களின் செல்வாக்கும் மதிப்பும் உயரும் நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத தன வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

 

9/12

தனுசு (Sagittarius) - செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். கடன் விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மனதைக் குழப்பிய விஷயங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

 

10/12

மகரம் (Capricorn) - நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவேற வாய்ப்புள்ளது.

 

11/12

கும்பம் (Aquarius) - உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான அறிகுறிகள் தென்படலாம். தொழில்ரீதியாகப் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது. வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும்.

 

12/12

மீனம் (Pisces) - புதிய அனுபவங்களைக் கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசியுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய வேலை வாய்ப்புகள் அல்லது பயணங்கள் அமையலாம்.