Today Rasipalan: இன்று ஜூலை 02ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
1/12மேஷம்
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் அமையும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதுமையான சூழல்கள் அமையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
அஸ்வினி : வரவுகள் உண்டாகும். பரணி : சாதகமான நாள். கிருத்திகை : புதுமையான நாள்.
2/12ரிஷபம்
ஜூலை 2, 2025
தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவுகள் வழியில் புரிதல் ஏற்படும். பண விவகாரங்களில் நாணயத்தோடு செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். கற்பனை துறைகளில் மதிப்புகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : புரிதல் ஏற்படும். ரோகிணி : மகிழ்ச்சியான நாள். மிருகசீரிஷம் : மதிப்புகள் மேம்படும்.
3/12மிதுனம்
ஜூலை 2, 2025
உடலில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றம் சாதகமாகும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். அமைதி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும். திருவாதிரை : மாற்றம் சாதகமாகும். புனர்பூசம் : மதிப்புகள் கிடைக்கும்.
4/12கடகம்
ஜூலை 2, 2025
பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு திறமைக்கேற்ப உயர்வும், முன்னேற்றமும் உருவாகும். பேச்சுகளில் சில அனுபவம் வெளிப்படும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்து வந்த தாமதங்கள் புரியும். மனை விருத்திக்கான உதவிகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும். பூசம் : முன்னேற்றமான நாள். ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
5/12சிம்மம்
ஜூலை 2, 2025
குடும்ப உறுப்பினர்கள் மூலம் தனவரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதியும், ஒற்றுமையும் நிலவும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
மகம் : வரவுகள் கிடைக்கும். பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும். உத்திரம் : ஒற்றுமை மேம்படும்.
6/12கன்னி
ஜூலை 2, 2025
மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத தேவையற்ற செலவுகள் உண்டாகும். தாயின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணியாட்கள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண் பச்சை நிறம்
உத்திரம் : குழப்பங்கள் நீங்கும். அஸ்தம் : அனுகூலமான நாள். சித்திரை : ஆதரவான நாள்.
7/12துலாம்
ஜூலை 2, 2025
எழுத்து பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். காதுகள் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மூலம் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகள் மூலம் மனதில் அமைதியின்மை உருவாகும். நட்பு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சித்திரை : திறமைகள் வெளிப்படும். சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும். விசாகம் : அமைதியின்மையான நாள்.
8/12விருச்சிகம்
ஜூலை 2, 2025
வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். மாற்று மருத்துவம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
விசாகம் : மதிப்புகள் உயரும். அனுஷம் : எண்ணங்கள் மேம்படும். கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
9/12தனுசு
ஜூலை 2, 2025
தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற சாதகமான சூழல் உண்டாகும். மனதில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சமுக பணிகளில் சில அனுபவம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மூலம் : சாதகமான நாள். பூராடம் : பிரச்சனைகள் குறையும். உத்திராடம் : அனுபவம் மேம்படும்.
10/12மகரம்
ஜூலை 2, 2025
தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழியில் அனுசரித்து செல்லவும். கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆராய்ச்சி பணிகளில் வித்தியாசமான அனுபவம் ஏற்படும். கடன் செயல்களில் கவனம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : அனுசரித்து செல்லவும். திருவோணம் : சாதகமான நாள். அவிட்டம் : கவனம் வேண்டும்.
11/12கும்பம்
ஜூலை 2, 2025
உத்தியோக விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பொழுது போக்கு செயல்கள் மூலம் கையிருப்புகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். கலை சார்ந்த துறைகளில் இழுபறியான சூழல் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அவிட்டம் : பொறுமை வேண்டும். சதயம் : சேமிப்புகள் குறையும். பூரட்டாதி : இழுபறியான நாள்.
12/12மீனம்
ஜூலை 2, 2025
மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறும். பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தேவையில்லாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சிகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும். உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும். ரேவதி : புத்துணர்ச்சியான நாள்.