Today Rasipalan: இன்று ஜூலை 15ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
1/12குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். கலை துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு முடிவுகள் உருவாகும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
அஸ்வினி : அமைதியான நாள். பரணி : தெளிவுகள் ஏற்படும். கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.
2/12உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும். ரோகிணி : ஆசைகள் நிறைவேறும். மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும்.
3/12எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் சாதகமாகும். மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். முன்னேற்றம் குறித்த சிந்தனை மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் சாதகமாகும். திருவாதிரை : சிந்தனை மேம்படும். புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
4/12சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். அவசர அவசரமாக முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பொருளாதாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்த தன்மை உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும். பூசம் : வாதங்களை தவிர்க்கவும். ஆயில்யம் : அலைச்சல்கள் ஏற்படும்.
5/12உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். உயர் கல்வியில் சில மாற்றமான தருணம் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு காரியத்தில் பொறுமையுடன் செயல்படவும். புதிய செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
மகம் : புதுமையான நாள். பூரம் : பொறுமையுடன் செயல்படவும். உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
6/12எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். சிக்கல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
உத்திரம் : லாபம் மேம்படும். அஸ்தம் : வாய்ப்புகள் சாதகமாகும். சித்திரை : பொறுப்புகள் குறையும்.
7/12கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும். சுவாதி : ஒத்துழைப்பு ஏற்படும். விசாகம் : பொறுப்புகள் மேம்படும்.
8/12திட்டமிட்ட பணிகள் தாமதமாகி முடிவு பெறும். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். அரசு பணிகளில் இருந்த இழுப்பறிகள் குறையும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்புகள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும். அனுஷம் : சந்திப்புகள் ஏற்படும். கேட்டை : ஒத்துழைப்புகள் மேம்படும்.
9/12தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். பெரியவர்கள் இடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். தாயின் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். விளையாட்டுத் துறைகளில் அரசு உதவிகள் சாதகமாகும். ரசிப்பு தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
மூலம் : அலைச்சல்கள் உண்டாகும். பூராடம் : ஆரோக்கியத்தில் கவனம். உத்திராடம் : பொறுமை வேண்டும்.
10/12பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். தந்தை வழியில் அனுசரித்து செல்லவும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். மறதி பிரச்சனைகள் விலகும். புதிய ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நறுமணப் பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : சோர்வுகள் உண்டாகும். திருவோணம் : ஆர்வமின்மை குறையும். அவிட்டம் : ஆதாயகரமான நாள்.
11/12மனதளவில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். நண்பர்கள் வட்டத்தில் மதிப்புகள் மேம்படும். பழைய நினைவுகளால் செயல்களில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும். சதயம் : ஆரோக்கியத்தில் கவனம் பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
12/12நினைத்த சில பணிகளால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினரிடம் இருந்த வேறுபடுகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மற்றும் தெளிவுகள் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : அலைச்சல் அதிகரிக்கும். உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும். ரேவதி : தெளிவுகள் பிறக்கும்.