ஆடி 01 புதன்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Written ByRK Spark
Published: Jul 16, 2025, 05:51 AM IST|Updated: Jul 16, 2025, 05:51 AM IST

Today Rasipalan: இன்று ஜூலை 16ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்1/12

மேஷம்

உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். தாய்மாமன் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முதலீடுகள் மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் 

அஸ்வினி :  பொறுமை வேண்டும்.  பரணி : வேறுபாடுகள் மறையும். கிருத்திகை : அபிவிருத்தியான நாள்.

ரிஷபம்2/12

ரிஷபம்

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குறுகிய கால கடன் பிரசனைகள் குறையும். தடைபட்ட முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் கவலைகள் மனதில் இருந்து விலகும். எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். கலைத்துறைகளில் நல்வாய்ப்புகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் :  அடர் சிவப்பு நிறம் 

கிருத்திகை : பொறுப்புகள் கிடைக்கும்.  ரோகிணி :  அனுகூலமான நாள். மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்3/12

மிதுனம்

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதளவில் இருந்த இறுக்கங்கள் குறையும். நறுமண பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். தொழில் நிமித்தமான நட்பு வட்டம் விரிவடையும். அரசு சார்ந்த சில உதவிகள் சாதாகமாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு  அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். திருவாதிரை : ஆதாயகரமான நாள். புனர்பூசம் : உதவிகள் சாதாகமாகும். 

கடகம்4/12

கடகம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். செலவு விஷயங்களை திட்டமிட்டு செயல்படுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் :  பச்சை நிறம்

புனர்பூசம் : வேறுபாடுகள் விலகும். பூசம் : ஆர்வம் ஏற்படும். ஆயில்யம் : நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம்5/12

சிம்மம்

பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். உயர் அதிகாரிகளை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வேலையாட்களால் சிறு அலைச்சல்கள் உண்டாகும். சொத்து பிரச்சனைகளில் பொறுமையை கையாள்வது நல்லது. அரசு காரியங்களில் சில விரயங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

மகம் : அனுபவம் மேம்படும். பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.  உத்திரம் : விரயங்கள் ஏற்படும். 

கன்னி6/12

கன்னி

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். வெளியூர் பயண சிந்தனைகள் அதிகாரிக்கும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு  அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.  அஸ்தம் : மதிப்புகள் மேம்படும். சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.

துலாம்7/12

துலாம்

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். வியாபார விஷயங்களில் ஒத்துழைப்புகள் மேம்படும். மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

சித்திரை : நெருக்கடிகள் குறையும்.  சுவாதி : உதவிகள் சாதகமாகும். விசாகம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

விருச்சிகம்8/12

விருச்சிகம்

சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனை சார்ந்த விஷயங்களால் லாபங்கள் மேம்படும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். புதிய கருவிகள் வாங்கும் செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும். அனுஷம் : லாபங்கள் மேம்படும். கேட்டை : சிந்தித்து முடிவெடுக்கவும். 

தனுசு9/12

தனுசு

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரமான விஷயங்களால் குழப்பங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் நம்பிக்கையை உருவாக்கும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 மூலம் : கவனம் வேண்டும்.  பூராடம் : முன்னேற்றம் ஏற்படும். உத்திராடம் : நம்பிக்கை மேம்படும்.

மகரம்10/12

மகரம்

தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தொண்டையில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் அமையும். திருவோணம் : உதவிகள் கிடைக்கும். அவிட்டம் : அனுபவம் கிடைக்கும். 

கும்பம்11/12

கும்பம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். விற்பனை பிரிவில் ஆதாயம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு  அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

அவிட்டம் : அறிமுகம் ஏற்படும். சதயம் : கவனம் வேண்டும்.  பூரட்டாதி :  ஆதாயகரமான நாள்.

மீனம்12/12

மீனம்

சுபகாரியம் சார்ந்த செயல்களில் காலதாமதம் உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் அசதியினால் வேலையில் ஆர்வமின்மை ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு  அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 

பூரட்டாதி : தாமதம் உண்டாகும்.  உத்திரட்டாதி : ஆர்வமின்மையான நாள். ரேவதி : ஏற்ற இறக்கமான நாள்.