பங்குனி 6 வியாழக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று மார்ச் 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /12

செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் அதிகரிக்கும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம்ரோஸ் நிறம் அஸ்வினி :  பதற்றமின்றி செயல்படவும். பரணி : கற்பனைகள் அதிகரிக்கும். கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.

2 /12

உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கலகலப்பான சூழல் அமையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் கிருத்திகை : உற்சாகமான நாள். ரோகிணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும். மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

3 /12

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றமான சூழல் உருவாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். ஆன்மிக பயணம் சாதகமாகும். விளையாட்டு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்களும் பழக்கவழக்கங்களில் புதுமையும் உருவாகும். புது விதமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம் மிருகசீரிஷம் :  மாற்றமான நாள். திருவாதிரை : ஆர்வம் ஏற்படும். புனர்பூசம் : குழப்பங்கள் நீங்கும்.

4 /12

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். உத்தியோகப் பணிகளில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். மனதில் நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். துன்பம் அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். பூசம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆயில்யம் :  ஆதரவுகள் மேம்படும்.

5 /12

சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். ஆரோக்கியம் தொடர்பான  இன்னல்கள் குறையும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். ஓட்டுநர் துறைகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். கல்விப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : முன்னேற்றம் ஏற்படும். பூரம் : இன்னல்கள் குறையும். உத்திரம் : மேன்மை உண்டாகும்.

6 /12

பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பணிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் உத்திரம் : லாபகரமான நாள்.   அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும். சித்திரை : நம்பிக்கை பிறக்கும்.

7 /12

வியாபாரத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிரமம் அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம் சித்திரை : உதவிகள் கிடைக்கும். சுவாதி : புரிதல் உண்டாகும். விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

8 /12

சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். இரக்கம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் விசாகம் : குழப்பங்கள் உண்டாகும். அனுஷம் : நன்மையான நாள். கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.

9 /12

ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். தந்தையின் ஆரோக்கியம் நிமித்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மூலம் :  மாற்றம் உண்டாகும். பூராடம் : கவனம் வேண்டும். உத்திராடம் :  தெளிவுகள் ஏற்படும்.

10 /12

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். சேமிப்பு மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமைகள் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திராடம் : ஒற்றுமை பிறக்கும். திருவோணம் : ஆர்வமின்மை குறையும். அவிட்டம் : புரிதல் உண்டாகும்.

11 /12

வியாபார விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மனை விஷயங்களில் லாபங்கள் மேம்படும். நெருக்கமானவர்களிடம் மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அவிட்டம் : நுணுக்கங்களை  அறிவீர்கள். சதயம் : லாபங்கள் மேம்படும். பூரட்டாதி : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

12 /12

பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஒற்றுமையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். தொல்லை அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும். உத்திரட்டாதி : தேடல்கள் உண்டாகும். ரேவதி : நிதானம் வேண்டும்.