சித்திரை 30 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று மே 13ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /12

குடும்ப உறுப்பினர்களிடம் கோபமின்றி செயல்படவும். மனதை பாதிக்கும் வகையிலான நகைச்சுவை பேச்சுக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதங்கள் ஏற்படக்கூடும். புதிய நபர்களிடம் அறிமுகத்தின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அஸ்வினி : பேச்சுகளில் கவனம் வேண்டும். பரணி : மாற்றமான நாள். கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

2 /12

குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும். ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும். மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

3 /12

நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வாகனம் சார்ந்த பழுதுகளை சீர் செய்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கவலைகள் நீங்கி எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சமூகம் சார்ந்த பணிகளில் ஆதரவு மேம்படும். உத்தியோகப் பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம் மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும். திருவாதிரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புனர்பூசம் : உழைப்பு அதிகரிக்கும். 

4 /12

கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கற்பனை கலந்த உணர்வுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கவலை குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் புனர்பூசம் : ஆர்வமின்மை குறையும். பூசம் : குழப்பங்கள் நீங்கும். ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.

5 /12

தாய்வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். உறவினர்களிடத்தில் மதிப்பு மேம்படும். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் மகம் : ஆதரவான நாள்.   பூரம் : அனுசரித்து செல்லவும். உத்திரம் : சாதகமான நாள்.

6 /12

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் விருப்பங்கள் உண்டாகும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் புரிதலும், தெளிவும் ஏற்படும். கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். பிரீதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் :  6   அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திரம் : இன்னல்கள் குறையும். அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும். சித்திரை :  மனப்பக்குவம் பிறக்கும்.

7 /12

செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். எதிர்காலம் நிமிர்ந்தமான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் சித்திரை : மேன்மையான நாள். சுவாதி : சூழ்நிலையறிந்து செயல்படவும். விசாகம் : இலக்குகள் பிறக்கும்.

8 /12

மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்களில் விவேகத்துடன் இருக்கவும். சிந்தனை திறனில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் லாபம் ஏற்படும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து சிந்தித்து செயல்படவும். வரவு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : திறமைகள் வெளிப்படும். அனுஷம் : ஈர்ப்புகள் அதிகரிக்கும். கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

9 /12

எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திர தன்மை மேம்படும். உடன் இருப்பவர்களின் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவேறும். தொழிலில் புதிய முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். கோபம் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் மூலம் : சோர்வு நீங்கும். பூராடம் : புதுமையான நாள். உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

10 /12

தனவரவில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். மறுமணம் சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இணையம் சார்ந்த வர்த்தகத்தில் மேன்மை ஏற்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் உத்திராடம் : ஏற்ற, இறக்கங்கள் குறையும். திருவோணம் : இழுபறிகள் மறையும். அவிட்டம் : மேன்மை ஏற்படும்.

11 /12

செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். சுபகாரியம் தொடர்பான பணிகளை முன்னின்று செய்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்ந்தமான சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஆதரவு உண்டாகும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும். சதயம் : மதிப்பு அதிகரிக்கும். பூரட்டாதி : ஆதரவு உண்டாகும்.

12 /12

தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் சற்று கவனம் வேண்டும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம் பூரட்டாதி : அனுசரித்து செல்லவும். உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும். ரேவதி : கவனம் வேண்டும்.