இன்றைய ராசிபலன் : டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும்?

இன்றைய ராசிபலன் : டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமை மேஷம் முதல் மீனம் வரை பொதுப்பலன்

 

இன்றைய ராசிபலன் : டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 

1 /12

மேஷம் - குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்; புதிய வாகனம் வாங்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிட்டும். நிதிநிலை இன்று சிறப்பாக அமையும்.  

2 /12

ரிஷபம் - மனக்குழப்பம் நீங்கி இன்று தெளிவு பிறக்கும்; உடன் பிறந்தவர்கள் பாசமாக இருப்பர். அலுவலகத்தில் புது பொறுப்புகளை ஏற்க நேரிடும். சவால்களைச் சந்தித்து வெற்றி பெறுவீர்கள்.    

3 /12

மிதுனம் - குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது; விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளவும். உத்தியோகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கலாம். அமைதி காப்பது நன்மை பயக்கும்.

4 /12

கடகம் - நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் இன்று நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள்.  

5 /12

சிம்மம் - எதிர்பார்த்த பணம் இன்று கைக்கு வந்து சேரும்; மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் புதிய அதிகாரியால் உங்கள் மதிப்பு கூடும். சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.  

6 /12

கன்னி - வெளிவட்டாரத்தில் உங்களது மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உத்தியோகம் சிறந்து காணப்படும்.  

7 /12

துலாம் - வெளிவட்டாரத்தில் புதிய நட்புகள் அமைந்து அனுகூலம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள்.  

8 /12

விருச்சிகம் - கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும்; மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அமைதி காக்கவும். திட்டமிட்ட வேலைகள் நிறைவேறும்.  

9 /12

தனுசு - சற்று உடல்சோர்வு மற்றும் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தேடிய முக்கிய ஆவணங்கள் அலுவலகத்தில் கிடைக்கும்.  

10 /12

மகரம் - பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். அலுவலகத்தில் மற்றவர் பணிகளையும் சேர்த்து செய்ய நேரிடலாம்.  

11 /12

கும்பம் - குடும்பத்தில் ஒரு கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப்புழக்கம் இன்று அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.  

12 /12

மீனம் - நீங்கள் தீட்டிய புதிய திட்டங்கள் இன்று நிறைவேறும். பிள்ளைகள் உங்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது வெற்றிக்கு உறுதுணையாகும்.