Diwali Release Highest Collection Movies: இதுவரை தீபாவளிக்கு வெளியாகி அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
1/11
2/11கைதி: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான கைதி திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 105 கோடி வசூல் செய்தது.
3/11ஆரம்பம்; நடிகர் அஜித் குமார் நடித்த ஆரம்பம் திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இப்படம் அமோக வெற்றியை பெற்ற நிலையில், ரூ. 124 கோடி வசூல் செய்தது.
4/11துப்பாக்கி: விஜய் நடிப்பில் உருவான துப்பாக்கி திரைப்படம் 2012 தீபாவளிக்கு வெளியானது. அட்டகாசமான இப்படம் ரூ. 125 கோடி வசூல் செய்தது.
5/11கத்தி: 2014ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் கத்தி. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் ரூ. 128 கோடி வசூல் செய்தது.
6/11வேதாளம்: அஜித் குமார் நடிப்பில் வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் வேதாளம். இப்படம் சுமார் ரூ. 128 கோடி வசூல் செய்தது. இப்படம் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது.
7/11அண்ணாத்தே: ரஜினிகாந்த், நயன்தாரா, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அண்ணாத்தே. இப்படம் ரூ. 160 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
8/11சர்க்கார்: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்க்கார். இப்படம் சுமார் ரூ. 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
9/11மெர்சல்: நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இப்படம் ரூ. 260 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
10/11பிகில்: விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில் இப்படம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
11/11அமரன்: இப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் சிவக்கார்த்திக்கேயனின் அமரன் திரைப்படம் தான். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் ரூ. 328 கோடி வசூல் செய்தது.