IPL Trades: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை டிரேட் செய்யப்பட்ட முன்னணி 10 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
ஐபிஎல் வரலாற்றில் 2009ஆம் ஆண்டில் இருந்து பல டிரேட்கள் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமான 10 வீரர்களை மட்டும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1/1010. டி காக்: 2018இல் ஆர்சிபி இவரை மும்பைக்கு டிரேட் செய்தது. டி காக் அப்போது ரூ.2.8 கோடிக்கு All-Cash டிரேடிங் மூலம் ஆர்சிபியில் இருந்து மும்பைக்கு டிரேட் செய்யப்பட்டார். 2019இல் 529 ரன்கள், 2020இல் 503 ரன்கள் என மும்பை அணி அந்த 2 ஆண்டுகள் கோப்பை வெல்ல உறுதுணையாக இருந்தார்.
2/109. ராபின் உத்தப்பா: ராஜஸ்தான் இவரை சிஎஸ்கேவுக்கு டிரேட் செய்தது. இதுவும் All-Cash மூலம் டிரேட் செய்யப்பட்டது. 2021இல் சிஎஸ்கே கோப்பையை வெல்ல இவர் பேரூதவியாக இருந்தார். 4 போட்டிகளில் மட்டும் 115 ரன்களை குவித்தார்.
3/108. டிரன்ட் போல்ட்: டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி இவரை ரூ.3.2 கோடிக்கு All-Cash மூலம் மும்பை அணிக்கு 2020ஆம் ஆண்டில் டிரேட் செய்தது. இவர் அந்த சீசனில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை கோப்பை வெல்வதற்கு வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
4/107. ஷர்துல் தாக்கூர்: இவரை கொல்கத்தா அணி ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணியிடம் All-Cash டீல் மூலம் கடந்த 2023இல் டிரேட் செய்தது. அவர் அந்த சீசனில் டெல்லிக்கு 7 விக்கெட்டுகளை, 113 ரன்களை எடுத்தார்.
5/106. ஆவேஷ் கான்: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் டிரேட் செய்தது. இவருக்கு பதில் தேவ்தத் படிக்கலை லக்னோ அணி பெற்றது. ஆவேஷ் கான் 2024 சீசனில் ராஜஸ்தானுக்கு 19 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொடுத்தார்.
6/105. ஹர்ஷல் பட்டேல்: 2021ஆம் ஆண்டில் ஆர்சிபி அணி, டெல்லி அணிக்கு டேனியல் சாம்ஸை கொடுத்து, ஹர்ஷல் பட்டேலை டிரேடிங் மூலம் பெற்றுக்கொண்டது. இந்த சீசனில் ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக விளையாடி ஆர்சிபி அணிக்கு 32 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
7/104. ரவிசந்திரன் அஸ்வின்: 2020ஆம் ஆண்டில் பஞ்சாப் அணி இவரை டெல்லி அணிக்கு டிரேட் செய்தது. ரூ.7.6 கோடிக்கு All-Cash மூலம் டிரேட் நடந்தது. அந்த 2020ஆம் ஆண்டில் அஸ்வின் டெல்லி அணிக்கு 13 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொடுத்தார். அந்த சீசனில் டெல்லி அணி இறுதிப்போட்டி வரை தகுதிபெற்றது.
8/103. பார்த்திவ் பட்டேல்: மும்பை அணி இவரை 2015ஆம் ஆண்டில் ஆர்சிபியிடம் இருந்து பெற்றது. மும்பை 2015, 2017இல் கோப்பையை வெல்ல பார்த்திவ் பட்டேல் முக்கிய பங்கு வகித்தார்.
9/102. கேம்ரூன் கிரீன்: இவரை ஆர்சிபி அணி ரூ.17.5 கோடிக்கு மும்பையிடம் இருந்து டிரேட் செய்து பெற்றது. 2024ஆம் ஆண்டு சீசனில் ஹர்திக் பாண்டியாவை அணியில் எடுப்பதற்கு மும்பை அணி ஒரு பெரிய விலை கொண்ட வீரரை விடுவிக்க வேண்டும் என்பதால் இவரை ஆர்சிபி, மும்பையிடம் இருந்து பெற்றது. 2024ஆம் ஆண்டு சீசனில் கேம்ரூன் கிரீன் ஆர்சிபிக்கு 255 ரன்களை அடித்தது மட்டுமின்றி 10 விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார்.
10/101. ஹர்திக் பாண்டியா: 2022இல் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து, 2023இல் இறுதிப்போட்டி வர வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணியை ஜொலிக்க வைத்த ஹர்திக் பாண்டியா அடுத்த 2024 சீசனிலேயே மும்பை அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். அப்போது அவரின் ஐபிஎல் மதிப்பு ரூ.15 கோடி ஆகும். மேலும், இந்த டிரேடிங்தான் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய டிரேட்டாக பார்க்கப்படுகிறது. ஆனால் 2024 சீசனில் ஹர்திக் தலைமையில் மும்பை 10வது இடத்தில் நிறைவு செய்த நிலையில், 2025 சீசனில் 3வது இடத்தில் முடித்தது குறிப்பிடத்தக்கது.