ஐபிஎல் அணிகள் கழட்டிவிட்ட 10 விலை உயர்ந்த வீரர்கள்.. இவர்களுக்கு இன்னும் மவுஸ் இருக்கா?

Top 10 Most Expensive Players Released By Ipl Teams: 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் மினி ஏலத்தை முன்னிட்டு அனைத்து அணிகளும் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் பட்டியல்களை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், விடுவிக்கப்பட்ட விலை உயர்ந்த வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம். 

1 /10

வெங்கடேஷ் ஐயர்: ஐபிஎல் மெகா ஏலத்தின்போது வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால், ரூ. 23.75 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால் 2025 ஐபிஎல்லில் அவர் அதற்கேற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்பதால் 2026 ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக அந்த அணி அவரை விடுவித்துள்ளது.

2 /10

மதீஷா பத்திரனா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்த மதீஷா பத்திரனாவை அந்த அணி விடுவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெத் ஓவர்களில் இவரது பந்து வீச்சு சிஎஸ்கே அணிக்கு சில வெற்றிகளை பெற்று தந்த போதிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அந்த அணியால் ரூ. 13 கோடிக்கு விடுவிக்கப்பட்டுள்ளார். 

3 /10

ஆண்ட்ரே ரஸ்ஸல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தனது அதிரடியான பேட்டிங்கால் பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் அண்ட்ரே ரஸ்ஸல். அவர் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுபவர். இருந்தபோதிலும் அவரை ரூ. 12 கோடிக்கு கேகேஆர் அணி விடுவித்துள்ளது. 

4 /10

ரவி பிஷ்னோய்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 11 கோடிக்கு ரவி பிஷ்னோய்யை விடுவித்துள்ளது. அவர் அந்த அணியின் முக்கிய ஸ்பின்னராக இருந்தபோதிலும் எல்எஸ்ஜி அணி இப்படியான ஒரு முடிவை எடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

5 /10

ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஒரு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தபோதிலும் அந்த அணி அவரை ரூ. 9 கோடிக்கு விடுவித்துள்ளது. அவரை மினி ஏலத்தில் எந்த அணி வாங்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. 

6 /10

லியாம் லிவிங்ஸ்டன்: ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை ரூ. 8.75 கோடிக்கு ஆர்சிபி அணி விடுவித்துள்ளது. பெரிய ஹிட்டிங் மற்றும் லெக் ஸ்பின்னுக்கு பெயர் பெற்றிருந்தாலும், அடிக்கடி ஏற்படும் காயங்கள் மற்றும் சீரற்ற ரன்கள் காரணமாக அவரை அந்த அணி வெளியேற்றி உள்ளது. 

7 /10

ஆகாஷ் தீப்: எல்எஸ்ஜி அணி, பந்துவீச்சு மாற்றத்தின் ஒரு பகுதியாக, ரூ.8 கோடி மதிப்புள்ள வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை விடுவித்துள்ளது. அவர் ஐபிஎல்லில் தனது திறமையை வெளிப்படுத்த தவறியதால், அந்த அணி இப்படியான ஒரு முடிவை எட்டியுள்ளது. 

8 /10

டேவிட் மில்லர்: அனுபவம் மிகுந்த வீரராக கருதப்படும் டேவிட் மில்லர் ரூ. 7.50 கோடிக்கு லக்னோ அணி விடுவித்துள்ளது. அவர் அந்த அணியின் ஒரு நல்ல ஃபினிஷராக இருப்பார் என எதிர்பார்ப்பில் எடுத்த நிலையில், அவர் அதை பூர்த்தி செய்ய தவறியதால், எல்எஸ்ஜி அவரை விடுவிக்கும் முடிவை எடுத்தது. 

9 /10

அன்ரிச் நார்ட்ஜே: ரூ. 6.50 கோடி மதிப்பிலான அன்ரிச் நார்ட்ஜேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது. அவர் 2025 ஐபிஎல்லில் தன்னை நிருபிக்க தவறியதால்,அவரை விடுவிக்கும் முடிவை கேகேஆர் அணி எடுத்தது. 

10 /10

டெவோன் கான்வே: 2025 ஆம் ஆண்டில் நீண்ட காயம் காரணமாக நீக்கப்பட்டு, குறைவான போட்டிகளில் விளையாடிய பிறகு, நம்பகமான தொடக்க வீரர் டெவன் கான்வேயை CSK ரூ.6.25 கோடிக்கு விடுவித்தது. சென்னை அணி தனது டாப் ஆர்டரை புதுப்பிக்க விரும்புவதால், கான்வேவை விடுவிக்கும் முடிவை எடுத்தது.