Top 10 Richest Women Entrepreneurs In India : இந்தியாவில் இருக்கும் டாப் 10 பணக்கார பெண் தொழிலதிபர்கள் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Top 10 Richest Women Entrepreneurs In India : இந்தியாவை பொருத்தவரை, பல்வேறு பெண்கள் சிறந்த பணக்கார தொழிலதிபர்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள், பல்வேறு துறைகளில் புரிந்து வரும் சாதனைகளும் வியக்கத்தக்க வகையில் இருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவின் சிறந்த பணக்கார பெண் தொழிலதிபர்களின் லிஸ்டை, இங்கு பார்ப்போம்.
இந்தியாவின் கோடீஸ்வர பெண் தொழிலதிபர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர், சாவித்ரி ஜிண்டா. இவரது சொத்து மதிப்பு 2,91,550 கோடியாக இருக்கிறது. இவர், இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் 6வது இடத்திலும் உள்ளார்.
ரேகா ஜுன்ஜுன்வாலா மறைந்த பங்குச்சந்தை மாஸ்டர்ஹெட் ராகேஷின் மனைவி. இவரது மறைவிற்கு பின், மனைவியே அனைத்து சொத்துகளுக்கும் அதிபதி ஆனார். இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் இவரது சொத்து மதிப்பு, 60,000 கோடியாக இருக்கிறது.
Landmark group நிறுவனரான ரேணுகா ஜக்தியானி, இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறார். இவரது சொத்து மதிப்பு, 47,600 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.
வினோத் ராய் குப்தா, இப்பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 39,950 கோடியாக உள்ளத். இவர், ஹேவல்ஸ் மின் உபகரணஙக்ள் தயாரிக்கும் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
ஐந்தாம் இடத்தில் ஸ்மிதா கிருஷ்ணா கோத்ரேஜ் உள்ளார். கோத்ரேஜ் நிறுவனத்தின் நிறுவனரான இவரது சொத்து மதிப்பு, 29,750 கோடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கிரண் மஜூம்தாஜ் ஷா, இதில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு, ரூ.28.900 ஆக இருக்குமாம். இவர், Biocon நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
ஏழாவது இடத்தில், ராதா வேம்பு உள்ளார். ZOHO நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், சுமார் ரூ.27,200 கோடி சொத்துகளுக்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அனு அகா, இந்த பட்டியலில் 8ஆம் இடத்தை பெற்றுள்ளார். இவர், Thermax நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரது சொத்து மதிப்பு, 26,350 கோடி இருக்குமாம்.
லீனா திவாரி, இந்த பட்டியலில் 9ஆம் இடத்தை பிடித்துள்ளார். USV மருத்து நிறுவனத்தின் நிறுவனரான இவரது சொத்து மதிப்பு, சுமார் ரூ.25,500 கோடியாக இருக்குமாம்.
10வது இடத்தில் இருக்கும் இவரது பெயர், ஃபல்குனி நாயர். Nykaa அழகுசாதன நிறுவனத்தின் நிறுவனரான இவர் சுமார் ரூ.24,650 கோடி சொத்துக்கு அதிபதி என்று கூறப்படுகிறது.