South indian movie with highest first day collection: முதல் நாளில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? இந்த பட்டியலில் யார் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.
1/10இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் தான். சமீபத்தில் வெளியான் கூலி முதல் நாளில் ரூ. 151 கோடி வசூல் செய்துள்ளது.
2/10பவன் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ஓஜி. இப்படம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படம் முதல் நாளில் ரூ. 154 கோடி வசூல் செய்தது.
3/10யாஷ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் கேஜிஎஃப் 2. இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட்டானதால், இரண்டாவது பாகத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் முதல் நாளில் 160 கோடி ரூபாய் வசூல் செய்தது.
4/10ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தேவரா. இப்படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூல் செய்தது.
5/10பிரபாஸ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் சலார். இப்படம் முதல் நாளில் ரூ. 178 கோடி வசூல் செய்தது.
6/10இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படம் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. முதல் நாளில் ரூ. 185 கோடி வசூல் செய்தது.
7/10பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் கல்கி 2898 AD. இப்படம் முதல் நாளில் ரூ. 191 கோடி வசூல் செய்தது.
8/10பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன் ஆகியார் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் பாகுபலி 2. இப்படம் முதல் நாளில் ரூ. 210 கோடி வசூல் செய்தது.
9/10ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோ நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படம் உலகளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், முதல் நாளில் மட்டும் சுமார் 220 கோடி ரூபாய் வசூல் செய்தது.
10/10நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் புஷ்பா முதல் பாகம். இப்படம் முதல் நாளில் சுமார் 300 கோடி வரை வசூல் செய்தது.