கவர்ச்சி நடனத்தின் மூலம் கல்லா கட்டும் டாப் நடிகைகள்

Written ByVijaya Lakshmi
Published: Nov 26, 2025, 08:08 PM IST|Updated: Nov 26, 2025, 08:08 PM IST

கோலிவுட்டில் ஒரு ஐட்டம் பாடல் காட்சியில் நடனமாட அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளின் பட்டியலை இங்கே காணலாம்.

கோலிவுட் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா துறையிலும் ஒரு சில நடிகைகள் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாட (ஐட்டம் சாங்ஸ்/ஸ்பெஷல் அப்பியரன்ஸ்) முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக, அல்லது சில சமயங்களில் அதைவிட அதிகமாகவே சம்பளம் வாங்குகிறார்கள். 

1/6

ஐட்டம் பாடல்களுக்கு அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளின் பட்டியல் இங்கே

2/6

ஸ்ருதி ஹாசன்

தனது தனித்துவமான நடன பாணி மற்றும் நடிப்புத் திறனால், ஸ்பெஷல் பாடல்களுக்கு கணிசமான தொகையைப் பெறுகிறார். அதன்படி ஹாய் நான்னா படத்தில் 'ஓடியம்மா' என்ற சிறப்புப் பாடலில் ஆடுவதற்காக அவர் ₹90 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

3/6

பூஜா ஹெக்டே

நடனத்தில் சிறந்து விளங்கும் இவர், இவரது கவர்ச்சியான பாடல்களுக்காக அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அதன்படி இவர் ரூ. 1.5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

4/6

காஜல் அகர்வால்

முன்னணி நடிகையான இவர், கவர்ச்சிப் பாடல்களில் தோன்றுவதற்காக ₹1.5 கோடி முதல் ₹2 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார்.

5/6

தமன்னா பாட்டியா

பல மொழிகளில் கவர்ச்சிக்கு பெயர்போன இவர், ஸ்பெஷல் நடனங்களுக்காக சுமார் ₹2 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அந்தவகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பிடித்த 'காவாலா' பாடலுக்கு ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

6/6

சமந்தா ரூத் பிரபு

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடமான ரூ. 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இவர் ஐட்டம் பாடல் சம்பளத்தில் புதிய உச்சம் தொட்ட நடிகைகளில் ஒருவாரானர்.