Highest paid South Indian actors 2025: தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகர்கள் யாரெல்லாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
1/5இந்த ஆண்டு அதிக சம்பளம் பெற்ற தென்னிந்திய நடிகர்களில் நடிகர் அஜித் குமார் 5வது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு இவரது நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் வெளியாகின. இதில் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு நடிகர் அஜித் குமார் ரூ. 160 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
2/5இந்த பட்டியலில் தெலுங்கு சினிமா நடிகர் பிரபாஸ் 4வது இடத்தில் உள்ளார். இவர் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் இவரது மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது. இதனால் தற்போது ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ. 175 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
3/5இப்பட்டியலில் நடிகர் விஜய் 3வது இடத்தில் உள்ளார். தற்போது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள இவர், ஜனநாயகன் படத்தில் நடித்தி வருகிறார். இதுவே அவரது கடைசி படம் என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில், விஜய் இப்படத்தில் நடிக்க சுமார் ரூ. 250 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
4/5சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த மாதம் கூலி திரைப்படம் வெளியானது. தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களில் ஒப்பந்தமாக உள்ளாராம். இந்த நிலையில், ஒரு படத்தில் நடிக்க சுமார் 260 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறாராம்.
5/5தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா 2 படத்திற்காக சுமார் 300 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.