ரஷ்மிகா மந்தனா ஒன்று அல்ல, நாடு முழுவதும் ஐந்து அழகான சொகுசு வீடுகளுக்கு சொந்தக்காரர் ஆவார். அவர் சமீபத்தில் மும்பையில் வாங்கி உள்ள வீடு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு ஆகும்.
நாம் அனைவரும் விடுமுறைக்கால வீட்டைப் பற்றி கனவு கண்டிருப்போம், இந்த வீடு மலைவாசஸ்தலத்திலோ அல்லது கோவா கடற்கரையிலோ இருக்க வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் இருக்கும். அப்படி நடிகை ராஷ்மிகா மந்தனா ஐந்து நகரங்களில் அற்புதமான சொகுசு வீடுகளைக் கொண்டுள்ளார்.
ராஷ்மிகாவுக்கு பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா மற்றும் கூர்க் ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இதில் சமீபத்தில் மும்பையில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா கடந்த ஆண்டு மும்பையில் தனது வீட்டை வாங்கினார். 'Mission Majnu' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அவர், அடிக்கடி வேலை விஷயமாக மும்பைக்கு வர வேண்டியிருப்பதால், அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
ரஷ்மிகாவுக்கு பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களிலும் ஆடம்பரமான வீடுகள் உள்ளன; அந்த இரண்டு வீடுகளும் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் ஸ்டைலானவை என்றும் கூறப்படுகிறது.
கூர்க் மற்றும் கோவாவில் உள்ள அவரது வீடுகள்தான் உண்மையில் நமக்கு பொறாமையை ஏற்படுத்தும். ரஷ்மிகா பூர்வீகமாக கூர்க்கைச் சேர்ந்தவர், அங்குதான் அவரது பெற்றோர்கள் இன்னும் வசித்து வருகிறார்கள்.
மேலும், அவரது கோவா வீடு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது! அழகான உட்புற அலங்காரங்கள், ஒரு ஆடம்பரமான நீச்சல் குளம், ஒரு கனவு இல்லமாகத் திகழ்கிறது.