ஓடிடியில் கடந்த வாரம் அதிக பார்வையாளர்களை ஈர்த்த வெப் சீரிஸ் லிஸ்ட் இங்கே.
Most Watched Web Series List: வாரம்தோறும் ஓடிடியில் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இறங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் ஓடிடியில் பல வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில், அதிக வியூஸ் பெற்ற வெப் சீரிஸ் என்னென்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்த வரிசையில் முதலில் இருப்பது பஞ்சாயத் சீசன் 4. இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெப் சீரிஸின் கடந்த மூன்று சீசன்களுமே மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், சீசன் 4ம் வெற்றியை பெற்றுள்ளது. கடந்த வாரம் இத்தொடர் சுமார் 42 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
'ஸ்குவிட் கேம் சீசன் 3’ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த இரண்டு சீசன்களும் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், இத்தொடரின் சீசன் 3 மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், இத்தொடர் கடந்த வாரம் சுமார் 30 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பது தி கிரேட் இந்தியன் கபில் ஷோ சீசன் 3. இத்தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது. கடந்த வாரத்தில் இத்தொடர் 25 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
’தி ஹின்ட்’ வெப் சீரிஸ், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டது ஆகும். இத்தொடர் சோனி லைவ்வில் வெளியாகி உள்ள நிலையில், கடந்த வாரம் 17 லட்சம் பார்வையாளர்களை பெற்று 4வது இடத்தில் உள்ளது.
நடிகை பிரியாமணி நடிப்பில் வெளியாகி உள்ள வெப் சீரிஸ் ’குட் வைஃப்’. இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் சுமார் 15 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.