Highest Tax Paying Actors: இந்தியாவில் அதிக வரி செலுத்தும் டாப் 7 நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1/7ஹிருத்திக் ரோஷன்: இந்த பட்டியலில் 7ஆம் இடத்தில் இருப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான். இவர் நடப்பு நிதியாண்டில் ரூ. 28 கோடி வருமான வரி செலுத்து இருக்கிறாராம்.
2/7ரன்பீர் கபூர்: நடிகர் ரன்பீர் கபூர் இப்பட்டியலின் 6வது இடத்தில் உள்ளார். இவர் நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ. 36 கோடி வருமான வரி செலுத்தி இருக்கிறாராம்.
3/7அஜய் தேவ்கன்: பிரபல பாலிவுட் நடிகரும் நடிகை கஜோலின் கணவருமான அஜய் தேவ்கன், 5வது இடத்தில் உள்ளார். இவர் ரூ. 42 கோடி வருமான வரி செலுத்தி உள்ளாராம்.
4/7அமிதாப் பச்சன்: பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் அமிதாப் பச்சன், நடப்பு நிதியாண்டில் ரூ. 71 கோடி வருமான வரி செலுத்தி உள்ளாராம்.
5/7சல்மான் கான்: இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர் சல்மான் கான். இவர், நடப்பு நிதியாண்டில், ரூ. 75 கோடி வருமான வரி செலுத்தி இருக்கிறார்.
6/7விஜய்: பிரபல நடிகருகம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இப்பட்டியலில் 2வது இடத்தில் பிடித்து இருக்கிறார். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரது கடைசி படம் என கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தில் நடிக்க அவர் ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில், இவர் ரூ. 80 கோடி வருமான வரி செலுத்தி உள்ளாராம்.
7/7ஷாருக்கான்: இப்பட்டியலின் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் ஷாருக்கான் ஆவார். திரைத்துறையில் ,மட்டுமல்லாமல் மற்ற தொழில்களிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் ஷாருக்கான், நடப்பு நிதியாண்டி ரூ. 92 கோடி வருமான வரி செலுத்தி உள்ளார்.