Women Safety: பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவில் எந்த நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கு காணலாம். அந்த வகையில், முதல் 7 நகரங்களை இங்கு காணலாம்.
1/8மும்பை: மகாராஷ்டிராவின் தலைநகரான இது மகளிர் பாதுகாப்பில் 7வது இடத்தில் உள்ளது. மெட்ரோ சிட்டிகளில் இதுதான் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
2/8இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடாநகர்தான் மகளிருக்கு பாதுகாப்பான பகுதியாக விளங்குகிறது. நகரம் மிகச் சிறியது மற்றும் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்டதாகும். இதனாலேயே பாதுகாப்பும் அங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. மகளிருக்கு மிக பாதுகாப்பான நகரங்களில் இடாநகர் 6வது இடமாகும்.
3/8காங்டாக்: சிக்கிம் தலைநகரான காங்டாக் மிகக் குறுகிய நகரமாகும், இயற்கைக்கு உகந்த நகரமாகும். அரசின் பிரதான நோக்கமே மகளிருக்கான பாதுகாப்பாக இருக்கிறது. மகளிர் பாதுகாப்பில் காங்டாக் 5வது இடமாகும்.
4/8ஐஸ்வல்: மிஸோரம் நாட்டின் தலைநகரான இவர் பலமான சமூக கட்டமைப்பை கொண்டது. இதனால், மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடைபெறுகிறது. மகளிர் பாதுகாப்பில் ஐஸ்வல் 4வது இடமாகும்.
5/8புபனேஷ்வர்: ஒடிசாவின் தலைநகரான இங்கு போக்குவரத்து அமைப்பு மற்றும் சிறப்பான கண்காணிப்பு காரணமாக இங்கு மகளிருக்கு பாதுகாப்புக்கு அதிகம். மகளிர் பாதுகாப்பில் புபனேஷ்வர் 3வது இடத்தில் உள்ளது.
6/8விஷாகப்பட்டினம்: ஆந்திரபிரதேசத்தில் உள்ள இந்த நகரம் மகளிர் பாதுகாப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாதுகாப்பான போக்குவரத்து வசதி, ஆட்கள் நடமாட்டம் கொண்ட சாலைகள் காரணமாக மகளிர் பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது.
7/8கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தின் அழகான தலைநகரான கோஹிமாதான் பெண்கள் பாதுகாப்பில் நாட்டில் முதலிடத்தில் உள்ளது. இங்குதான் மற்ற நகரங்களை விட கோஹிமாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு.
8/8இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் மகளிர் பாதுகாப்பில் தேசிய வருடாந்திர அறிக்கை மற்றும் குறியீட்டு (NARI) அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.