அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 இயக்குநர்கள்.. லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் டைரக்டர்! யார் தெரியுமா?

Top 7 Highest Paid Directors: இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் யார் யார்? தமிழ் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்களா? என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம். 

 

1 /7

அட்லி: இந்த பட்டியலின் 7வது இடத்தில் இயக்குநர் அட்லி இருக்கிறார். நட்சத்திர நடிகர்களை வைத்து குறிப்பாக தமிழில் தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இவர், பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 60 கோடி என கூறப்படுகிறது. 

2 /7

சஞ்சய் லீலா பன்சாலி: இந்த பட்டியலின் 6வது இடத்தில் இருப்பவர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளார். இவர் ரன்வீர் சிங்கை வைத்து இயக்கிய பாஜிராவ் மஸ்தானி படத்திற்காக ரூ. 65 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. 

3 /7

சுகுமார்: இந்த பட்டியலின் 5வது இடத்தில் இருப்பவர் புஷ்பா பட இயக்குநர் சுகுமார். இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தை இயக்கியதற்கு ரூ. 75 கோடி சம்பளம் பெற்றார் என கூறப்படுகிறது. 

4 /7

ராஜ்குமார் ஹிரானி: இந்த பட்டியலின் நான்காவது இடத்தில் இருக்கும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. இவர் அமீர் கானை வைத்து பிகே படத்தை  இயக்கியதற்காக ரூ. 80 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. 

5 /7

பிரசாந்த் நீல்: இந்த பட்டியலின் மூன்றாவது இடத்தில் கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல். இவர் இப்படத்தை இயக்கியதற்காக ரூ. 100 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. 

6 /7

சந்தீப் ரெட்டி வங்கா: இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளார். இவர் அனிமல் படத்திற்காக சுமார் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. 

7 /7

ராஜமெளலி: இந்த பட்டியலின் டாப்பில் இருப்பவர் பிரபல இயக்குநர் ராஜமெளலி. இவர் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியதற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.