Highest Paid Players In WPL 2026: 2026ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனைகள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
பெத் மூனி: ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி குஜராத் அணிக்காக விளையாடுகிறார். இவரை அந்த அணி ரூ. 2.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
ஹர்மன்பிரீத் கவுர்: இந்திய வீராங்கானை ஹர்மன்பிரீத் கவுர் மும்பை இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். இவரை அந்த அணி 2.5 கோடி ரூபாய்க்கு மினி ஏலத்தில் வாங்கியது.
ரிச்சா கோஷ்: இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் ஆர்சிபி அணிக்காக விளையாடுகிறார். இவரை அந்த அணி ரூ. 2.75 கோடிக்கு வாங்கியது.
தீப்தி சர்மா: இந்திய வீராங்கனை தீப்தி சர்மா உபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரை அந்த அணி ரூ. 3.2 கோடிக்கு வாங்கியது.
நாட் ஸ்கிவர்: இங்கிலாந்து அணி வீரர் நாட் ஸ்கிவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சிறந்த ஆல்-ரவுண்ட்ரான இவரை அந்த அணி ரூ. 3.5 கோடிக்கு வாங்கியது.
அஷ்லேயி கார்ட்னர்: ஆஸ்திரேலியா வீராங்கனை அஷ்லேயி கார்ட்னர் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். இவரை அந்த அணி ரூ. 3.5 கோடிக்கு வாங்கியது.
ஸ்மிருதி மந்தனா: இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இவரை அந்த அணி 3.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஸ்மிருது மந்தனா தலைமையில் ஒருமுறை ஆர்சிபி அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.