Players With Most Centuries In IPL: ஐபிஎல் சீசனில் இதுவரை அதிக சதங்கள் அடித்த முதல் 7 வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
விராட் கோலி: ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். அவர் 8 சதங்கள் அடித்துள்ளார். இதுவரை ஐபிஎல்லில் ஒரே அணிக்காக விளையாடும் வீரர் என்ற பெருமையையும் வைத்துள்ளார்.
ஜோஸ் பட்லர்: ஐபிஎலில் இதுவரை ஜோஸ் பட்லர் 7 சதங்கள் அடித்துள்ளார். அவர் மும்பை, ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய நிலையில், தற்போது குஜராத் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
கிறிஸ் கெயல்: ஐபிஎல் சீசனில் கிறிஸ் கெயல் 6 சதங்கள் அடித்து இப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இவர் ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
கேஎல். ராகுல்: ஐபிஎல் இதுவரை கே.எல். ராகுல் 5 சதங்கள் அடித்து இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இவர் ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப், லக்னோ அணிகளுக்காக விளையாடியுள்ள அவர் கடந்த 2025 சீசனில் இருந்து டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
சுப்மன் கில்: தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் சுப்மன் கில், இதுவரை ஐபிஎல்லில் 4 சதங்கள் அடித்துள்ளார்.
ஷேன் வாட்சன்: ஐபிஎல்லில் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார் ஷேன் வாட்சன். இவர் ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் சென்னை அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் சிஎஸ்கே அணிக்காக முட்டியில் இரத்தம் வர களத்தில் நின்று ரன்கள் குவித்தது எவராலும் மறக்க முடியாதது.
டேவிட் வார்னர்: ஐபிஎல்லில் இதுவரை டேவிட் வார்னர் 4 சதங்கள் அடித்துள்ளார். இவர் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிக்காக விளையாடி இருக்கிறார்.