ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு போக இருக்கும் 7 வீரர்கள்.. லிஸ்ட்டில் CSK வீரரும் இருக்காரு!

IPL Mini Auction High Demand Players List: ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள முதல் 10 வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

 

1 /7

கேமரூன் கிரீன் (Cameron Green): இந்த பட்டியல் முதலில் இருப்பவர் கேமரூன் கிரீன். பேட்டிங் ஆல் ரவுண்டரான இவருக்கு அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரை சிஎஸ்கே போன்ற முக்கிய அணிகள் போட்டிப்போடும்.   

2 /7

மதீஷா பத்திரானா (Matheesha Pathirana): மதீஷா பத்திரானா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கபப்ட்டார். அவரை விடுவித்ததால் சிஎஸ்கே அணிக்கு ரூ. 13 கோடி கிடைத்த நிலையில், அவரை மினி ஏலத்தில் குறைந்த விலையில் எடுக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது. ஆனால் இவருக்கு கடும் போட்டி நிலவும் என்பதால் இவரது விலை எகிற என எதிர்பார்க்கப்படுகிறது. 

3 /7

வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer): கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் ரூ. 23 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் 2025 ஐபிஎல் சீசன் அவருக்கு சிறப்பாக அமையாத நிலையில், அவரை கேகேஆர் அணி கழட்டிவிட்டுள்ளது. இருப்பினும் வரயிருக்கும் மினி ஏலத்தில் வெங்கடேஷ் ஐயருக்கு நல்ல டிமெண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

4 /7

ஜேமி ஸ்மித் (Jamie Smith): ஜேமி ஸ்மித் மெகா ஏலத்தில் பங்கேற்காததால் அவர் ஐபிஎல்லில் விளையாடவில்லை. இந்த நிலையில், அவர் மினி ஏலத்திற்கு தனது பெயரை பதிவிட்டுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் ஒரு பயமற்ற பேட்டிங்கை கொண்டுள்ளார். இதனால் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

5 /7

ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis): 2025 ஐபிஎல்லில் ஜோஷ் இங்கிலிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும் அவரை பஞ்சாப் அணி கழட்டிவிட்டுள்ளது. ஆனால் அவரை மீண்டும் மினி ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும் என தெரிகிறது. அதேசமயம் மற்ற அணிகளும் அவருக்கு போட்டி போடும்.   

6 /7

ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra): சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக வளம் வந்த ரச்சின் ரவீந்திராவை மினி ஏலத்திற்கு விட்டிருக்கிறது சிஎஸ்கே அணி நிர்வாகம். ஆனால் மீண்டும் அவரை எடுக்க முயற்சிக்கலாம். அதேசமயம் மற்ற அணிகளும் அவரை எடுத்து தங்களது அணியை பலப்படுத்த நினைக்கும். குறிப்பாக இவருக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி போட்டிப்போடும் என தெரிகிறது.   

7 /7

ரவி பிஷ்னோய் (Ravi Bishnoi): லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முக்கிய வீரரான ரவி பிஷ்னோய் மினி ஏலத்திற்கு விடப்பட்டுள்ளார். இவருக்கு அதிக டிமெண்ட் இருக்கும் என தெரிகிறது. சிஎஸ்கே அணியும் இவருக்கு முயற்சிக்கலாம்.