South Indian Richest Cinema Couples: தென்னிந்திய சினிமாவில் பணக்கார ஜோடியாக இருக்கும் டாப் 7 பிரபலங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர்: தென்னிந்தியாவின் பணக்கார ஜோடிகளின் லிஸ்ட்டில் 7வது இடத்தில் உள்ளது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர் ஜோடி. இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 450 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
யாஷ் - ராதிகா பண்டிட்: கேஜிஎப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் கண்ணட நடிகர் யாஷ். இவரது மனைவி ராதிகா பண்டிட். இவர்களுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.
அஜித் குமார் - ஷாலினி: இந்த பட்டியலின் 5வது இடத்தில் அஜித் - ஷாலினி ஜோடி உள்ளது. தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர் அஜித். தற்போது கார் ரேசிலும் அசத்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இந்த ஜோடிக்கு சுமார் 450 முதல் 500 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஜோதிகா - சூர்யா: இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருப்பது சூர்யா - ஜோதிகா ஜோடிதான். இவர்களின் சொத்து மதிப்பும் சுமார் 500 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் - சினேகா: இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருப்பது அல்லு அர்ஜுன் - சினேகா ஜோடி. இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
நாகர்ஜுனா - அமலா: தென்னிந்திய சினிமாவின் பணக்கார ஜோடி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது நாகர்ஜுனா - அமலா கோடி. இவர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 800 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ராம் சரண் - உபாசனா காமினேனி: இப்பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது ராம் சரண் - உபாசனா காமினேனி ஜோடிதான். ஒருபக்கம் தென்னிந்தியாவின் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார் ராம் சரண். மறுபக்கம் பல முதலீடுகளில் ஈடுபட்டு வருமானம் செய்து வருகிறார் அவரது மனைவி உபாசனா காமினேனி. அவர் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனத்தின் துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.