Top actresses searched in google: 2025 இல் தமிழ் பெண்கள் அதிகம் தேடிய பிரபல நடிகைகள் யார்? யார்? நடிப்பு, அழகு, வாழ்க்கை பாணி மற்றும் சமூகத் தொடர்புகளின் அடிப்படையில் Google டிரென்ட்ஸ் தரவுகளின் அடிப்படையில் இவர்களே முன்னிலையில் உள்ளனர்!
Top actresses searched in google: தமிழ் பெண்கள், சமீபத்தில் அதிகம் தேடிய நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். இயற்கை அழகு, குடும்ப வாழ்வு, திறமை உள்ளிட்ட காரணங்களால் இந்த 5 நடிகைகள் அதிகமாக தேடப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் பெண்கள் நேர்மையான வாழ்விற்கு, மன உறுதிக்கு, மற்றும் சுயவளர்ச்சிக்கான வழிகாட்டுதலையும் தேடுகிறார்கள்.
1/5நயன்தாரா 2025-இல் அதிகமாக தேடப்பட்ட நடிகை நயன்தாரா. திருமணம் வாழ்க்கை, மற்றும் "Annapoorani" போன்ற படங்கள் தொடர்பான தகவல்களைத் தேடும் பெண்கள் அதிகம். தனுஷ்-நயந்தாரா சர்ச்சையிலும் அதிகம் தேடபட்ட நாயகி ஆவர். இயல்பான தோற்றம், தனித்துவமான பாணி, மற்றும் ‘Lady Superstar’ பட்டம் காரணமாக, பல பெண்களுக்கு முன்மாதிரி ஆகிறார்.
2/5சாய் பல்லவி இயற்கை அழகு, மினிமலிசம் கொண்ட சாய் பல்லவி, தமிழ் பெண்களுக்கு பிடித்தமானவராக மாறியுள்ளார். நாடகத்துவம் இல்லாத நடிப்பு, நேர்மை மற்றும் தனித்துவமான திறன் காரணமாக, Google தேடலில் தொடர்ந்து இடம் பிடிக்கிறார். இயல்பான அழகுக்கு முன்மாதிரி இவர்தான்.
3/5ரஷ்மிகா மந்தனா Pushpa 2 போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களின் நாயகியாக, 2025இல் பெண்கள் அதிகம் தேடிய நடிகை ரஷ்மிகா. "National Crush" என அழைக்கப்படும் அவரது அழகு, பப்ளிக் இமேஜ், மற்றும் உறவுகள் பற்றிய அப்டேட்களே முக்கிய காரணம்.
4/5கீர்த்தி சுரேஷ் மஹானதி, தசரா போன்ற படங்களில் தனது திறமையை நிரூபித்த கீர்த்தி, பெண்கள் Google-ல் தேடும் முக்கியமான பெயராக இருக்கிறார். சீரான நடிப்பு, பாரம்பரிய தோற்றம் மற்றும் குடும்பப் பாணி அவர்களுக்கு நல்ல following உருவாக்கியுள்ளன.
5/5தீபிகா படுகோண் தனது ரசிகர்களை - சினிமா, வாழ்க்கைத் தருணங்கள் மற்றும் மாடர்ன் திருமண வாழ்க்கையால் கவரும் தீபிகா, தமிழ் பெண்களிடையே தேடப்பட்ட நடிகைகளில் உள்ளார். மனநலம் மற்றும் பெண்களின் சுயவளர்ச்சி குறித்த அவரது பார்வைகள் அதிகம் தேடப்படுகின்றன.