திரைத்துறையில் ஒரு திரைப்படத்தின் வெற்றி, ஒரு நடிகரின் வாழ்க்கையையே புரட்டிப் போடும். ஆனால், சில சமயங்களில் உச்ச நட்சத்திரங்களே, காலப்போக்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கக்கூடிய முக்கியமான பாத்திரங்களை சில காரணங்களுக்காக மறுத்திருக்கிறார்கள். இத்தகைய முடிவுகள் சில சமயம் அடுத்த நடிகைக்கு ஒரு வரமாக அமையும், மறுத்தவர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும்.
பல முன்னணி தமிழ் நடிகைகள் முக்கியமான மற்றும் பெரிய வெற்றிப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை வெவ்வேறு காரணங்களால் மறுத்துள்ளனர். இந்தத் தவறான முடிவுகள் சில நடிகைகளின் சினிமா வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாகுபலி எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இந்த பிரமாண்டமான வரலாற்றுப் படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியின் பாத்திரத்தை முதலில் அணுகியது நடிகை ஸ்ரீதேவியைத்தான். ஆனால், தகவல்களின்படி, ஸ்ரீதேவி அவர்கள் கேட்ட அதிகப்படியான சம்பளம் அல்லது மற்ற நிபந்தனைகள் காரணமாக தயாரிப்புக் குழுவினர் ரம்யா கிருஷ்ணனை அணுகினர். ரம்யா கிருஷ்ணன் அந்தப் பாத்திரத்தை ஏற்று, அதன் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்றார்.
குஷி எஸ்.ஜே. சூர்யா இயக்கிய 'குஷி' திரைப்படம் விஜய் மற்றும் ஜோதிகா இருவருக்கும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்த பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரனைத்தான். ஆனால், சில காரணங்களால் சிம்ரன் அந்த வாய்ப்பை மறுக்கவே, ஜோதிகா அந்தப் பாத்திரத்தில் நடித்து, பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
சந்திரமுகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் 'சந்திரமுகி'. இதில் முதன்முதலில் நடிக்க ஒப்புக் கொண்டவர் நடிகை சிம்ரன் தான். ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அவர் கர்ப்பமாக இருந்ததால், அந்தப் படத்தில் இருந்து விலக நேரிட்டது. இந்த வாய்ப்பு ஜோதிகாவுக்குச் செல்ல, அவர் தனது அபாரமான நடிப்பால் 'சந்திரமுகி' பாத்திரத்தை அழியாப் புகழ் பெறச் செய்தார்.
துப்பாக்கி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த பிளாக்பஸ்டர் படத்தில் கதாநாயகி பாத்திரத்தில் நடிக்க பிரியா ஆனந்த் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், தேதிகள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான சிக்கல்கள் காரணமாக அவர் விலகினார்.
படையப்பா சூப்பர் ஹிட் படமான 'படையப்பா'-வில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அதை மறுத்ததால் அந்த வாய்ப்பு சௌந்தர்யாவுக்கு சென்றது.
காத்துவாக்குல ரெண்டு காதல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த சூப்பர் ஹிட் படமான காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் சமந்தா ஏற்று நடித்த 'கதீஜா' பாத்திரத்தில் முதலில் நடிக்க இயக்குநர் விக்னேஷ் சிவன், திரிஷாவை அணுகினார். ஆனால் அவர் வாய்ப்பு மிஸ் செய்ய சமந்தாவிடம் சென்றதுடன் படம் வேறு லெவல் ஹிட்டானது.
இப்படி பல நடிகைகள், தாங்கள் மறுத்த படங்கள் பிற்காலத்தில் பெரிய அளவில் வெற்றிப் படங்களாக மாறி, அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத பாத்திரத்தையும், புகழையும் கொண்டு வந்திருக்கும்.