Blood Purifier: இரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்ய உதவும்... சில மேஜிக் உணவுகள்

Published: Apr 27, 2025, 09:49 AM IST|Updated: Apr 27, 2025, 09:49 AM IST

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, ரத்த ஓட்டம் சீராகவும், ரத்தம் சுத்தமானதாகவும் நச்சுக்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான், உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்தினையும் பெற இயலும்.

இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் சில உணவுகளைப் பற்றி பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார். இதனை அறிந்து கொள்வதன் மூலம் இயற்கையாகவே ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Blood Purifier1/8

இரத்தத்தை சுத்தம் செய்தல்

நமது உடலில் செல்லும் இரத்தம் நச்சுக்கள் ஏதும் இன்றி தூய்மையாக இருந்தால் தான், உச்சி முதல் பாதம் வரை உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனும், புற ஊட்டச்சத்துக்களும் கிடைத்து இரத்த ஓட்டமும் கிடைத்து, மூளை முதல் இதயம், நுரையீரல், கல்லீரல் என அனைத்து உடல் உறுப்புகள் சீராக இயங்கும்

Blood Circulation2/8

சீரான ரத்த ஓட்டம்

தலை முதல் கால் வரை உள்ள உறுப்புகள் அனைத்தும் நல்ல நிலையில் இருக்க, சீரான ரத்த ஓட்டம் அவசியம். இந்நிலையில், ரத்தத்தை டீ டாக் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும் ஆற்றல் கொண்ட சிறந்த உணவுகளை பற்றி உளவியல் நிபுணர் கூறும் தகவல்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 

Beetroot Benefits3/8

பீட்ரூட்

பீட்ரூட் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நைட்ரேட்டுகளின் சக்தி மையமாகும். இது இரத்தத்தை டீடாக்ஸ் செய்வதிலும், கல்லீரல் வழியாக நச்சுக்களை வெளியேற்றுவதிலும் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள அதிக இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஆதிகரிக்கிறது. தலை முதல் கால் வரை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

Garlic4/8

பூண்டு

பூண்டு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நச்சு நீக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது நச்சுகளை அகற்றி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. பூண்டில் காணப்படும் அல்லிசின் என்ற சேர்மம், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வடிகட்ட உதவுகிறது.

Turmeric5/8

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற முகவராகும். இது ரத்தத்தை சுத்தம் செய்து கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. இயற்கையான முறையில் இரத்தத்தை டீடாக்ஸ் செய்ய உதவும் மஞ்சளை தொடர்ந்து உட்கொள்வது அசுத்தங்களைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

Green Vegetables6/8

பச்சை இலை காய்கறிகள்

பசலைக் கீரை, உள்ளிட்ட பிற கீரை வகைளில் குளோரோபில் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் கலந்துள்ள நச்சுகள் மற்றும் கன உலோகங்களை அகற்ற உதவுகிறது. இவற்றில் கல்லீரல் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த இரத்த சுத்திகரிப்பையும் ஆதரிக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களிலும் நிறைந்துள்ளன.

Lemon7/8

எலுமிச்சை

எலுமிச்சையில் நிறைந்துள்ள வைட்டமின் சி, உடலின் இயற்கையான டீடாக்ஸ் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரைக் குடிப்பது கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டுகிறது. செரிமானத்தை மேம்படுத்தி, இரத்தத்தை சுத்தம் செய்து அதன் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

Disclaimer8/8

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.