6 மாத குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுங்கள்

உங்கள் குழந்தை பிறந்து ஆறு மாதம் நிறைவு பெற்றுவிட்டது? அப்படியானால் இந்த உணவுகளை தவறாமல் கொடுத்துப் பழகுங்கள்.

6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி 6 மாதங்களுக்குப் பிறகு, குழந்தைக்கு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். இதனால் குழந்தை ஆரோக்கியமாக இருகக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 /8

வேகவைத்து மசித்த ஆப்பிளை 3 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை கொடுக்க வேண்டும்

2 /8

ஆறுமாதங்கள் பிறகு கஞ்சி கொடுக்க துவங்கும் போது ஓட்ஸும் துவங்கிவிடலாம். 

3 /8

​குழந்தைக்கு பழங்களை ஊட்ட முயற்சிக்கும் போது வாழைப்பழம் முதல் விருப்பமாக தேர்வு செய்யப்படுகிறது. நார்ச்சத்து நிறைவாக கொண்டுள்ள இது நீண்ட நேரம் குழந்தையை திருப்தியாக வைத்திருக்கும். 

4 /8

வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய கூறுகளின் சக்திவாய்ந்த மூலமாக இருக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

5 /8

6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு கேரட் மற்றும் பீட்ரூட் மசித்துக் கொடுக்கலாம்.

6 /8

குழந்தைக்கு 8 முதல் 9 மாதங்கள் ஆனதும், பருப்பு மற்றும் அரிசியால் செய்யப்பட்ட கிச்சடியைக் கொடுக்கலாம். ஆனால் கிச்சடியை மசித்த பின்னரே கொடுக்க வேண்டும்.

7 /8

8 முதல் 12 மாத குழந்தைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இட்லியை கொடுக்கலாம். இதில் உள்ள புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியமானவை.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.