2025 Flop Movies: 2025ஆம் ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படங்களில் படுதோல்விகளை சந்தித்தவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
2025 Top Hero Flop Movie: இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கும் திரைப்படங்கள் அனைத்தும் பெரிய ஹீரோக்களின் படம். அவர்களின் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு படமாக மக்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை.
தக் லைஃப் (Thug Life): மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, அமிராமி, சிம்பு உள்ளிட்ட பபலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இப்படம் வருவதற்கு முன்பாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படுதோல்வி அடைந்தது. எதிர்பார்ப்பின் காரணமாகவே இப்படம் ரூ. 200 கோடி வசூலை எட்டியது.
விடாமுயற்சி (Vidaamuyarchi): இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொதுவாக அஜித் படம் என்றாலே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் விடாமுயற்சி படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ஃபிளாப் ஆனது. எதிர்பார்ப்பு காரனமாக ரூ. 135 கோடி வசூல் செய்தது.
ரெட்ரோ (Retro): இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான படம் ரெட்ரோ. இப்படம் ரீலிஸ் ஆவதற்கு முன்பாக ரசிகர்கள் இடையே இப்படம் ஒரு கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் தோல்வியை தழுவியது. எதிர்பார்ப்பின் காரணமாக இப்படம் ரூ. 100 கோடி வசூலை தாண்டியது.
கூலி (Coolie): லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், சரத்குமார், நாகர்ஜுனா, அமீர் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட்ச் மாதம் வெளியான படம் கூலி. இப்பாத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. வெளியாவதற்கு முன்பே வசூல் வேட்டை செய்தாலும், பின்னர் விமர்சனம் ரீதியாக செம அடி வாங்கியது. வசூலில் இப்படம் ரூ. 400 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
மதராஸி (Madharaasi): இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் மதராஸி. அமரன் திரைப்படம் வெளியாகி நல்ல ஹிட்டாகி இருந்ததால், இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு யாரையும் திருப்தி அடைய செய்யவில்லை.