புரோட்டின் என்னும் புரதச்சத்து, நமது உடலுக்கு தேவையான மிகவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று. பொதுவாக அசைவத்தில்தான் புரோட்டீன் உள்ளது என்ற எண்ணம் உள்ளது. ஆனால் சைவ உணவுகளிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது.
நமது அன்றாட புரோட்டின் தேவையை பூர்த்தி செய்ய, சைவ உணவு பிரியர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவு வகைகளை, இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
1/8உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கும் அத்யாவசியமான ஊட்டச் சத்தான புரதச்சத்து, அசைவ உணவுகளில் மட்டுமல்லாது சைவ உணவுகளிலும் நிறைந்துள்ளது.
2/8தசைகள் வலுவாக இருப்பது முதல், உடல் பருமனை குறைப்பது, உடலில் ஆற்றல் குறையாமல் இருப்பது என, பல்வேறு காரணங்களுக்காக புரதச்சத்து நமது தினசரி டயட்டில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
3/8பீன்ஸ் வகை பருப்புகள்: பொதுவாகவே பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது என்றாலும், பீன்ஸ் வகை பருப்புகளில், புரதச்சத்து மிக அதிகம் உள்ளது.
4/8சியா விதைகள்: எக்கச்சக்க நார்ச்சத்து கொண்ட சியா விதைகளில் புரதம் அதிகம் உள்ளது. அதோடு இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் காணப்படுகிறது. இதனை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
5/8சோயா பீன்ஸ்: எக்கச்சக்க புரதச்சத்து கொண்ட சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு பன்னீர், தினசரி புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்ய மிகவும் உதவும். அரை கப் டோஃபு பன்னீரில் 10 கிராம் புரதம் உள்ளது.
6/8கினோவா: மற்ற தானியங்களை போல் அல்லாமல், கினோவா எக்கச்சக்க புரோட்டீன் கொண்டது. குளூட்டன் அல்லாத தானியமான இதில் மெக்னீசியம் சத்தும் நிறைந்துள்ளது
7/8ஆளி விதைகள்: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வீக்கத்தையும் குறைக்கும் ஆற்றல் கொண்ட ஆளி விதைகளில் எண்ணற்ற புரதச்சத்து நிறைந்துள்ளது.
8/8பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.