Top Actress Who Did Not Act In Tamil Movie 2025 : சில டாப் தமிழ் நடிகைகள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்து இப்போது வரை ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்கவில்லை. அவர்கள் யார் தெரியுமா?
Top Actress Who Did Not Act In Tamil Movie 2025 : தமிழ் திரையுலகில், டாப் நடிகைகளாக இருக்கும் சில தென்னிந்திய நடிகைகள் இருக்கின்றனர். அவர்கள் வேறு மொழி படங்களில் நடித்தாலும் தமிழில்தான் அவர்களுக்கான ரசிகர்கள் அதிகமானோர் இருப்பர். அப்படி, தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை கொண்ட டாப் 3 நடிகைகள், இந்த ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அவர்கள் யார் தெரியுமா?
பழைய நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், மலையாள திரையுலகம் மூலமாகத்தான் முதலில் திரையுலகிற்குள் அறிமுகமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்த 2 படங்கள் ஹிட் ஆக, உடனே இங்கு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆக தொடங்கினார். ஆனால், இந்த ஆண்டு அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழில் இவர் முன்னர் நடித்திருந்த ரிவால்வர் ரீட்டா படம் இன்னும் வெளியாகமல் இருக்கிறது.
பல்லாவரம் பொண்ணு என்கிற வார்த்தையை கேட்டாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருபவர், சமந்தாதான். இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு திரையுலகில் இருந்து பிரேக் எடுத்த இவர், சமீபத்தில் அவர் தயாரித்த சுபம் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர், எப்போது அடுத்து தமிழ் படத்தில் நடிப்பார் என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
சமந்தா, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்தார். இதற்கிடையில் அவர் சோலோ ஹீரோயினாக நடித்திருந்த சில படங்களும் தோல்வியுற்றது. இதனால், அவர் திரையுலகில் இருந்து விலகியிருப்பதாகவும் அவர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்தால் பெரும் வரவேற்பு கொடுக்க ரசிகர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீப சில ஆண்டுகளாக, மக்கள் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கிறார் பிரியங்கா மோகன். இவரும் சிவகார்த்திகேயன் படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். இவர் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக நடிக்கும் படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது.
இவர் கடந்த ஆண்டு பிரதர் படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதை தாண்டி இவர் படம் எதுவுமே வெளியாகவில்லை.
இந்த வருடம் த்ரிஷா காட்டில் மழைதான். இவர், தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு என வேறு சில தென்னிந்திய மொழிகளிலும் கமிட் ஆகியிருக்கிறார். இந்த ஆண்டில் அவரது குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய படங்கள் வெளியாகவில்லை. இதையடுத்து தக் லைஃப் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இன்னொரு டாப் நடிகையான நயன்தாரா, டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியிருந்தது. இதையடுத்து இன்னும் சில தமிழ் படங்களில் இவர் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.