பணக்கார தமிழ் நடிகைகள்: கோடிகளில் சொத்து! யார் யார் தெரியுமா?

Written ByThirishala S.P
Published: Sep 23, 2025, 11:57 AM IST|Updated: Sep 23, 2025, 11:57 AM IST

Tamil Actresses have net worth in crores list: தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகள் வெறும் படங்கள் மட்டுமல்ல, கோடிகளில் சொத்துகளும் கொண்டிருக்கிறார்கள். யாரின் சொத்து அதிகம்? யார் யார் சொகுசு வீடுகள், கார்கள், பிராண்டுகள் வைத்துள்ளனர் என்று தெரிந்தால் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்!

Tamil Actresses have net worth in crores list: நயன்தாரா, தமன்னா, சமந்தா மற்றும் பிற heroines‑க்களின் சொத்து மதிப்புகள் வெறும் எண்கள் அல்ல, அவர்களின் வெற்றி கதையைச் சொல்லும். பிளாக்பஸ்டர் படங்கள், பிராண்டு endorsements, சொகுசு முதலீடுகள் அவர்களை தமிழ் திரையுலகின் முன்னணியில் வைத்துள்ளன.

Actress net worth 1/8

நடிகைகள் சொத்து

நயன்தாரா முதல் கீர்த்தி சுரேஷ் வரை, இவர்களின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? அசந்து போய்டுவீங்க!

Nayanthara 2/8

நயன்தாரா:

நயன்தாரா: நயன்தாரா தமிழ் சினிமாவின் “Lady Superstar” என்று அழைக்கப்படுகிறார். இவர் நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் வரிசையில் தொடர்ந்து வெற்றி பெற்றதால், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.200 கோடி என ஊடகங்கள் மதிப்பிடுகின்றன. வீடுகள், கார்கள், பியூட்டி பிராண்ட், தனியார் விமானம் ஆகிய சொகுசு முதலீடுகள் அவரை முன்னணியில் நிறுத்துகின்றன.

Tamanna bhatia 3/8

தமன்னா பாட்டியா:

தமன்னா பாட்டியா: தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.120 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. திரைப்படங்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பர ஒப்பந்தங்கள், சொகுசு வீடுகள், கார்களின் சேகரிப்பு போன்றவை அவரின் வருமானத்தை அதிகரித்த முக்கிய காரணங்கள்.

 

Samantha ruth prabhu 4/8

சமந்தா ருத் பிரபு:

சமந்தா ருத் பிரபு: சமந்தா தென்னிந்தியாவின் பிரபல நடிகை, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஹிட் கதாநாயகி. சுமார் ரூ.95-110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. திரைப்பட வருமானம், பிராண்ட் endorsement, சுகாதார தொடர்பான வணிக முயற்சிகள், OTT திட்டங்கள் ஆகியவை அவரது வருமானத்தின் முக்கிய ஆதாரங்கள் ஆகும்.

Rashmika mandana5/8

ரஷ்மிகா மந்தன்னா:

ரஷ்மிகா மந்தன்னா: “National Crush” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஷ்மிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். “Pushpa” படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் அதிக வருமானம் பெறுகிறார். சுமார் ரூ.66 கோடி சொத்து மதிப்புள்ளவர் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் OTT பங்களிப்புகள் அவரை அதிகரித்தன.

 

Trisha krishnan 6/8

த்ரிஷா கிருஷ்ணன்:

த்ரிஷா கிருஷ்ணன்: 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் த்ரிஷா, இன்னும் வெற்றி கதாநாயகியாக இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.85 கோடி என செய்திகள் கூறுகின்றன. வீடுகள், கார்கள், விளம்பர ஒப்பந்தங்கள் ஆகியவை இவரது வருமானத்தின் அடிப்படை. ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாய்த் திகழ்கிறார்.

Priyamani 7/8

பிரியாமணி:

பிரியாமணி: பிரியாமணி தமிழ், தெலுங்கு மற்றும் OTT தளங்களில் புகழ்பெற்ற நடிகை. அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.50-58 கோடி என மதிப்பிடப்படுகிறது. திரைப்படங்கள், வலைத் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிராண்ட் endorsements ஆகியவை இவரது வருமானத்தின் முக்கிய ஆதாரங்கள். பல்துறை நடிப்பு அவரை எப்போதும் நிலைத்தவராக வைத்திருக்கிறது.

Keerthi suresh 8/8

கீர்த்தி சுரேஷ்:

கீர்த்தி சுரேஷ்: தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகி. சுமார் ரூ.41 கோடி சொத்து மதிப்புள்ளது. அவரது வருமானத்தின் முக்கிய பங்கு திரைப்படங்கள், பிராண்ட் விளம்பரங்கள், சென்னை மற்றும் ஹைதராபாத் சொத்து முதலீடுகள். இயற்கையான நடிப்பு மற்றும் dedication காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.