2025ல் ட்ரெண்டிங்கில் இருக்கும் 4 புது நாயகிகள்! இவர் ஒருவருக்கு மவுசு ஜாஸ்தி..

Trending New Heroines Of Tamil Cinema 2025 : தமிழ் திரையுலகில் புதிதாக வந்திருக்கும் சில நாயகிகள் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை இந்த லிஸ்டில் பார்ப்போம். 

Trending New Heroines Of Tamil Cinema 2025 : கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை பல ஹீரோயின்கள் வருவதும் போவதுமாய் இருக்கின்றனர். அந்த வகையில், 2025ஆம் ஆண்டிலும் பல நாயகிகள் வந்துள்ளனர். இந்த நடிகைகள் அனைவருமே இளமையான நாயகிகள், அனைவரும் 25 வயதுக்குள் இருப்பவர்கள். இதில் ஹைலைட் என்னவென்றால் இவர்கள் யாருக்குமெ தமிழும் தெரியாது. அந்த நாயகிகள் யார் யார் என்பதையும், இதில் யாருக்கு மவுசு அதிகமாக இருக்கிறது என்பதையும் இங்கு பார்ப்போம். 

1 /7

2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, தமிழ் சினிமாவிற்கு புது வரவாக பலர் வந்துள்ளனர். அதில், ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கியமான 4 இளம் ஹீரோயின்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

2 /7

21 வயதாகும் கீர்த்தி ஷெட்டி, பல தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன்முதலாக தமிழ் திரையுலகிற்குள்ளும் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர், கார்த்தியுடன் வா வாத்தியார் படத்திலும், பிரதீப் ரங்கநாதனுடன் LIK (Love Insurance Kompany) படத்திலும் நடித்து வருகிறார்.

3 /7

தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்துள்ள இன்னொரு புது நாயகி, ஸ்ரீலீலா. இவர், தமிழில் முதன்முதலாக பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் இவர் முக்கிய கேரக்டராக நடித்துள்ளார்.

4 /7

பிரேமலு படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான நாயகி, மமிதா பைஜூ. 23 வயதாகும் மமிதா, தமிழில் முதலில் நடித்த படம் ரெபெல். தற்போது இவர் வரிசையாக பல தமிழ் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

5 /7

மமிதா, தற்போது விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சூர்யாவுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியிருப்பதாகவும், இவர் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /7

நடித்த ஒரே தமிழ் படத்திலேயே கிடுகிடுவென வளர்ந்த நாயகி, கயாடு லோஹர். அசாமை சேர்ந்த இவர், சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

7 /7

கயாடு, தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிப்பதாகவும் இவரை தங்களது படங்களில் புக் செய்ய பல இயக்குநர்கள் காத்துக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்போதைக்கு இவர்தான், அதிக மவுசு நிறைந்த நாயகியாக இருக்கிறார்.